நல்ல நிர்வாகியா? ரப்பர் ஸ்டாம்பா? புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆவேசம்
புதுவை முதல்வர் நாரயணசாமியின் குற்றச்சாட்டு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.
புதுச்சேரி: நல்ல நிர்வாகியா இருக்க வேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமா? என்று புதுச்சேரி முதல்வர் நாரயணசாமியின் குற்றச்சாட்டுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்புக்கு பஞ்சம் வைக்காமல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கிரண்பேடியின் அதிரடி நடவடிக்கைகளால் ஆளும் கட்சியான காங்கிரஸ் அதிர்ந்து போயுள்ளது. இதனிடையே முதல்வர் நாரயணசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் ஆளுநர் கிரண்பேடி. முதல்வர் - ஆளுநருக்கிடையேயான அதிகார மோதல் மேலும் மேலும் வலுத்து வருகிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 'தான் ஒரு துணை நிலை ஆளுநர் என்பதை மறந்து தரம் தாழ்ந்து கிரண்பேடி செயல்படுகிறார்' என்று ஆவேசமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள கிரண்பேடி, நல்ல நிர்வாகியாக இருக்க வேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மக்கள் நீதி வேண்டி கண்ணீர் வடிப்பதால் நிர்வாகியாக உதவ வேண்டியது அவசியானது என்றும் முதல்வரும், ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications