கொடநாடு கொலையில் திடீர் திருப்பம்…போலீஸ் தேடிய ஜெ. மாஜி கார் டிரைவர் மர்ம மரணம்!
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவின் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின்
கோத்தகிரி: கொடநாடு பங்களா காவலாளியை கொலையில் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தனிப்படைகள்
இந்தக் கொலை ஏன் நடைபெற்றது? எதற்காக நடைபெற்றது? இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அங்குள்ள பெட்ரோல் நிலயைங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

போலீஸ் விசாரணை
மேலும் கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காயமடைந்த காவலாளி கிஷன்பகதூர் கூறிய அங்க அடையாளங்களை வைத்து கம்ப்யூட்டரில் வரைப்படம் வரைந்து அதனை நேற்று போலீசார் வெளியிட்டனர். அதனை வைத்தும் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.

கார் ஓட்டுநர்
இந்நிலையில், நேற்று கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் உள்பட 6 பேர் இந்த கொலையில் சிக்கியுள்ளனர். தற்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை கூடலூர் அழைத்து வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

திடீர் மரணம்
இதைத் தொடர்ந்து அவர்களை கொடநாடு எஸ்டேட்டுக்கு அழைத்து செல்லவும் திட்டமிட்டிருந்தனர். இப்படி இந்தக் கொலை விசாரணை பரபரப்பாக சென்று கொண்டிருக்க, முக்கிய குற்றவாளியாக போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் இன்று திடீரென விபத்தில் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

சதி?
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் ஒரு விபத்தில் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கனகராஜின் இந்த மர்ம மரணம் கொடா நாடு எஸ்டேட் காவலாளி கொலையில் உள்ள உண்மைகளை மறைக்கும் சதியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.‘
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications