Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டி போக்சோ கேஸில் பாதிக்கப்பட்ட சிறுமி கைவிலங்குடன் அழைத்து செல்லப்பட்டாரா? நீலகிரி எஸ்பி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் போக்சோ வழக்கில் கைதான இளைஞரை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட சிறுமி கைவிலங்குடன் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் விளக்கம் அளித்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 15 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் திருமணம் செய்த புகாரின் பேரில், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து அந்த வாலிபரையும், சிறுமியையும் அழைத்து விசாரணை நடத்தியதோடு, சிறுமியை தனியார் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

Was the girl victim in the POCSO case taken away in handcuffs? Nilgiri SP explain

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட பதிவில், லகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை, நீதிபதியிடம் வாக்குமூலம் அளிப்பதற்காக பெண் காவலர்கள் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்ணியமாக எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அரசியல் சட்ட அமைப்புகள் வழங்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியை குற்றவாளியைப்போல நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, இதற்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே வழக்கு விசாரணை தொடர்பாக சிறுமியை கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பெண் போலீஸ், சிறுமியை கை விலங்குடன் அழைத்து சென்றதாக சர்ச்சை வீடியோ ஒன்றும் வெளியானது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியும் போலீசார் என்னை கைவிலங்கு போட்டு அழைத்து சென்றதாக வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து சிறுமியின் தாய் ஊட்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் சிறுமியை கைவிலங்கு போட்டு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படும் தகவல் உண்மையில்லை என்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சிறுமியின் தாய் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் அளித்தார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி நீதிமன்றத்திற்கு தனது மகளை அழைத்து சென்ற போது, கை விலங்கு போடப்பட்டு இருந்தது என்று குற்றம்சாட்டி இருந்தார்.

இதுகுறித்து ஊட்டி துணை காவல் கண்காணிப்பாளர் யசோதா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தேன். இதன்படி சிறுமியிடம் நேரடி விசாரணை நடத்திய போது, சிறுமி கைவிலங்கு போடவில்லை என்று மறுத்துள்ளார். வழக்கமாக உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கிய பின் தான் கைவிலங்கு போட்டு, அதுவும் குற்றவாளிகளை தான் அவ்வாறு அழைத்து செல்ல முடியும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கை விலங்கு போடப்படுவது இல்லை. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் சிறுமி என்பதால், அவர் மாற்றி, மாற்றி பேசுகிறார். சிறுமியை அழைத்து சென்ற கண்காணிப்பு கேமரா வீடியோக்களை சோதனை செய்துவிட்டோம். அதில் சிறுமிக்கு கைவிலங்கு போடவில்லை என்பது உறுதியாகி உள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்களில் உண்மை தன்மையை அறிந்து செயல்பட வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+