மேலூர், திருமங்கலம் மக்கள் தேவைக்காக வைகை அணை நீர்திறக்கப்பட்டது!
மதுரை மாவட்ட மக்களின் நீர் வையை பூர்த்தி செய்யும் விதமாக இன்று வைகை அணையில் இருந்து முதல்வர் உத்தரவுபடி நீர் திறக்கப்பட்டது.
மதுரை : மேலூர், திருமங்கலம் மக்களின் தண்ணீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து 900 கன அடி நீரை கூடுதலாக திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர், திருமஙகலம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பகுதியில் போதிய மழை பெய்யாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கால்நடைகளுக்கு போதிய குடிநீரின்றி சிரமப்படுவதாக மக்கள் அரசிடம் தெரிவித்தனர்.
மேலும் மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே மதுரை மேலூரில் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்காமல், நீட்டிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்ததால் மேலூர் பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். தங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி நேற்று காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டம் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை அடுத்து வைகை அணையில் இருந்து இன்று முதல் 7 நாட்களுக்கு திருங்கலம் பிரதான கால்வாய் வழியாக 200 கன அடி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பெரியாறு கால்வாய் வாயிலாக 700 கனஅடி அளவு தண்ணீர் திறக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து மதுரை மாவட்டம் வெள்ளையன்கிரி அருகே பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், சரோஜா மாவட்ட ஆட்சியர் வீரராகவராகூ மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications