கனமழை காரணமாக முல்லை பெரியாறில் நீர்மட்டம் உயர்வு... தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!
சென்னை: கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் 3 அடி உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதற்கு கேரளா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அக்னி தொடங்கி விட்டது வெயில் வாட்டி வதைக்கும் என அச்சத்தில் இருந்த மக்களை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை குளிர வைத்து இருக்கிறது.

கனமழை...
இந்நிலையில், கனமழை காரணமாக நேற்று ஒரேநாளில் மட்டும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்திருப்பது தமிழக விவசாயிகளை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே நாளில்...
கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. இதனால், நேற்று 111.01 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 114.04 அடியாக உயர்ந்துள்ளது.

நீர்வரத்து...
மேலும், அணைக்கு வரும் நீர்வரத்து 1,535 கன அடியில் இருந்து 6,649 கன அடியாக உயர்ந்துள்ளதால், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப் பட்டுள்ளது. இது 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது.

மழையளவு...
நேற்று மட்டும் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 28 மி.மீட்டரும், தேக்கடியில் 51.4 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications