வேகமாக குறைகிறது பாபநாசம்-மணிமுத்தாறு அணைகள் நீர்மட்டம்.. குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
நெல்லை: பருவ மழை ஏமாற்றியதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கலை பொறுத்தவரை குடிநீர், விவசாய பணிகளுக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை நம்பியே உள்ளது. இந்த அணைகளின் மூலம் நெல்லை. தூத்துக்குடி மட்டுமல்லாது, விருதுநகர் பகுதிக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

பாபநாசம் அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 107 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழையும் பெய்யும்.
தென் மேற்கு பருவமழை காலத்தில் போதிய மழையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர். நவம்பர், டிசம்பர் காலத்தில் கனமழை பெய்யும். இதன் மூலம் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி விடும். கடந்த ஆண்டு வடிகிழக்கு பருவமழை காலத்தில் இரண்டு அணைகளும் நிரம்பி வழிந்தன.
ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலம் முழுவதும் வறட்சி காரணமாக ஏமாற்றம் அளித்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் கடந்த செப்டம்பர் மாதம் வறண்டன. மணிமுத்தாறு அணையின் கையிருப்பு நீரை வைத்தே குடிநீர் தேவையை பூர்த்தி செய்து சமாளித்தனர்.
அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றிவிட்டது. இந்த பருவ மழை காலத்தில் அணையின் நீர்மட்டம் 20 அடி வரை மட்டுமே உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையில் அதுவும் இல்லை. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 33 அடியாக உள்ளது. மணிமுத்தாறின் நீர்மட்டம் 57.12 அடியாக உள்ளது. அணையின் தற்போதைய நீர் இருப்பை வைத்து குடிநீர் தேவையை ஒரு மாதம் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்பதால் அதிகாரிகள் திகைத்து போய் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications