அங்க என்னப்பா சத்தம்... நாங்க சுதந்திரமாக இருக்கோம்ப்பா..சொல்வது "தோப்பு"!
நாங்கள் சர்வ சுதந்திரமாக இருக்கிறோம். எங்களை யாரும் அடைத்து வைக்கவில்லை என்று எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கூறியுள்ளார். செய்தியாளர்களை எங்கள் ஆட்கள் தாக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்ஸ்சில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்று அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கூறியுள்ளார். செய்தியாளர்களை தாக்கியது எங்கள் ஆட்களில்லை என்றும் அவர் தெறிவித்துள்ளார்.
அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரு அணியாக செயல்பட்டு வருகிறது. சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்களை ஒரு சொகுசு பேருந்தில் வைத்து சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள சில ரிசார்ட்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.

எம்எல்ஏக்கள் மற்றவர்களை சந்திக்கவும், தொலைபேசியில் பேசவும் தடைவிதிக்கப்பட்டது. எம்எல்ஏக்களை கண்காணிக்க மன்னார்குடியில் இருந்து அடியாட்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் பகுதி எம்.எல்.ஏ வை காணவில்லை என பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ. ஆர்.டி.ராமசந்திரன், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ. எம்.கீதாவை ஆகியோரை மீட்டு நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என, குன்னம் தொகுதி வாக்காளர் எம்.ஆர்.இளவரசன் மற்றும் வி.ப்ரீத்தா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.டி.செல்வம், டி.மதிவாணன் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., கூவாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இதனையடுத்து கூவத்தூர் ரிசார்ட்டில் இன்று காலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் காஞ்சிபுரம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதுபற்றி செய்தி சேகரிப்பதற்காக கூவத்தூர் ரிசார்ட்ஸ் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை சிலர் நபர்கள் கல் வீசி தாக்கினர். இது சில செய்தியாளர்கள் மீது விழுந்தததாக கூறப்படுகிறது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று தற்காலிகமாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசம், கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக கூறியுள்ளார். இது போன்ற தவறான செய்தியை எதிர் அணியினர் தான் பரப்பிக்கொண்டிருக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications