அவிங்களாத்தான் எங்களைத் தேடி வர்றாங்க.. நாங்க போகவில்லை.. தேமுதிக சொல்கிறது!
ஈரோடு: நாங்கள் கூட்டணிக்காக யாரையும் அணுகவில்லை. அவர்களாகத்தான் வருகிறார்கள், நாங்கள் பேரமும் பேசவில்லை என்று தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ், பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் பலமுறைகளில் தீவிரமாக முயன்று வருகின்றன. ஆனால் யாருக்கும் இதுவரை வெற்றி கிட்டவில்லை.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவும் இந்த ரேஸில் இருந்தது. இந்த முறை அது விலகி விட்டது. தன்னைத் தேடி வரும் அத்தனை கட்சிகளிடமும் பாரபட்சமின்றி தேமுதிக பேரம் பேசுவதாக கூறப்படுகிறது.

பேரம் பேசவில்லை
ஆனால் இதை அக்கட்சியின் கொபசெ வி.சி.சந்திரகுமார் மறுத்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் யாருடனும் பேரம் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

நாங்களாக போகவில்லையே
மேலும் அவர் கூறுகையில், தேமுதிக யாருடனும் தானாகச் சென்று இதுவரை பேச்சு நடத்தவில்லை. ஆனால் திமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகள் தேமுதிகவை தாமாகவே அணுகிப் பேச்சு நடத்தி வருகின்றன.

விஜயகாந்த் முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவர்
யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் விஜயகாந்த் அறிவிப்பார். விஜயகாந்த் எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள்.

எல்லோரும் எங்களை விரும்புகிறார்கள்
அனைத்துக் கட்சிகளும் விரும்பும் ஒரே கட்சி தேமுதிக தான். கூட்டணிக்காக தேமுதிக பேரம் நடத்துகிறது என்பது தவறான தகவல் என்றார் சந்திரகுமார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications