செவ்வாய்: உலகம் பட்ட பாட்டைப் பார்க்கும்போது ... நாம எவ்வளவோ பெட்டர் போலிருக்கே....!
சென்னை: பல்வேறு உலக நாடுகளும் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுகளில் பல காலமாகவே ஈடுபட்டு வருகின்றன. அதில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளிக் கூட்டமைப்பு ஆகியவை மட்டுமே வெற்றியை சுவைத்துள்ளன.
ஆனால் இந்த வெற்றிக்கு முன்னர் அவை பட்ட பாடு இருக்கே, பெரும்பாடாகும். அந்த வகையில் நாம் ரொம்ப சவுகரியமாக செவ்வாய்க்குப் போய் விட்டோம்.
நமது செவ்வாய் பயணம் சொகுசாக அமைந்ததற்கு முக்கியக் காரணம் - அடிப்படை ஆர் அன்ட் டி அதாவது பூர்வாங்க ஆய்வுகள் மற்றும் முயற்சிகளை நாம் பிறரின் தோல்வியிலிருந்து எடுத்துக் கொண்டதே. அதாவது யாரெல்லாம் என்னெல்லாம் தவறு செய்தார்களோ அதையெல்லாம் முழுமையாக தவிர்த்து விட்டு பாசிட்டிவான விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால்தான் நமது செவ்வாய் பயணம் சிக்கல் இல்லாமல் போய் விட்டது.
அதற்காக நமது விஞ்ஞானிகளை குறைத்து மதிப்பிட்டு விட்டு விட முடியாது. நிச்சயம், நமது விஞ்ஞானிகளின் கடும் உழைப்பும், புத்திசாலித்தனமும், துல்லியமான கணிப்புகளும்தான் நமது முதல் முயற்சியை வெற்றிகரமாக்கியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.
சரி உலக நாடுகள் இதற்கு முன்பு பட்ட கஷ்டங்களைப் பார்ப்போமா...

50 ஆண்டு காலப் போராட்டம்
அமெரிக்காதான் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தனது விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடாகும். அந்த பெருமையைப் பெற்றது அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலமாகும். கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது செவ்வாயில் தரையிறங்கியது. ஆனால் இந்த வெற்றிக்குப் பின்னால் அமெரிக்காவின் 50 ஆண்டு கால அறிவியல் போராட்டமும், ஆய்வுகளும் வியர்த்து விறுவிறுத்துப் போய் நிற்கின்றன.

ஆய்வில் சில நாடுகள்
செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள்தான் தீவிரமாக உள்ளன. தற்போது அதில் இந்தியாவும் முக்கிய நாடாக இணைந்துள்ளது. இதுதவிர ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் ஐரோப்பிய விண்வெளி கூட்டமைப்பும் செவ்வாய் ஆராய்ச்சியில் இடம் பெற்றுள்ளது.

முதல் முயற்சி 1962ல்
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பபப்ட்ட முதல் விண்கலம் சோவியத் யூனியனின் ஸ்புட்னிக் 24 ஆகும். இதைத் தொடர்ந்து 1971ல் மார்ஸ் 2 ஆர்பிட்டரை அமெரிக்கா அனுப்பியது. பின்னர் 75ல் வைகிங் 1 மற்றும் 2 ஆகியவை அனுப்பப்பட்டன. 2003ல் ஐரோப்பிய யூனியன் சார்பில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் அனுப்பப்பட்டது. அதே ஆண்டில் அமெரிக்கா மார்ஸ் ரோவர் ஸ்பிரிட்டை அனுப்பியது. 2011ல் கியூரியாசிட்டி செவ்வாயில் தரையிறங்கியது.

அடுத்தடுத்து அடி வாங்கிய ரஷ்யா
ரஷ்யாதான் செவ்வாய் கிரக ஆய்வில் பல தோல்விகளைச் சந்தித்த நாடாகும். இது செவ்வாய் ஆய்வுக்காக அனுப்பிய விண்கலங்களில் 16 விண்கலங்கள் தோல்வியைச் சந்தித்துள்ளன. கடைசியாக அது அனுப்பிய விண்கலம் - போபாஸ் கிரண்ட் மிஷன். அது தோல்வியில் முடிந்தது.

சீனாவும் தோல்வி
இதேபோல சீனாவும் தனது யிங்குகோ 1 என்ற விண்கலத்தை அனுப்பி தோல்வியைத் தழுவியது. ரஷ்யாவின் உதவியுடன் அனுப்பப்பட்டது இந்த விண்கலம் என்பது முக்கியமானது. சுயமாகக் கூட அனுப்ப முடியவில்லை சீனாவால்.

இந்தியாவின் 3 ஆண்டு சாதனை
இந்த கஷ்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியா 3 ஆண்டுகளில் தான் நினைத்ததை சாதித்துள்ளது பெரிய விஷயம்தான். சுற்றுப் பாதை வரைக்கும்தான் நாம் போயுள்ளோம் என்றாலும் கூட இதுவே மிகப் பெரிய சாதனைதான். நம்மை விட பல விஷயங்களில் பல மடங்கு பலத்துடன் காணப்படும் சீனா, ரஷ்யா, ஜப்பானால் கூட சாதிக்க முடியாததை நாம் சாதித்துள்ளதே பெரிய சாதனைதானே....!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications