ஆட்சிக்கு பிரச்சினை இல்லை.. அடித்து சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்
Recommended Video

சென்னை : தினகரன் தரப்பு தொடர்ந்து தூங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், நாங்கள் விழிப்புடன் உள்ளோம் என்றும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அணி மாறியது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு இன்று டி.டி.வி தினகரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கினார். மேலும், மக்களின் ஆதரவு தினகரனுக்கு மட்டுமே இருப்பதாகவும், தொகுதி மக்களுக்கு உதவ பலர் முட்டுக்கட்டை போடுவதாலேயே தினகரனைச் சந்தித்து ஆதரவு வழங்கியதாவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதலளித்த ஜெயக்குமார், எம்.எல்.ஏ பிரபு அணி மாறியது குறித்து தனக்குத் தகவல் தெரியாது என்றும், இதுகுறித்து விசாரித்து பதிலளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல்கள் குறித்த கேள்விக்கு, ஸ்லீப்பர் செல்கள் இல்லை, தினகரன் அணி தான் ஸ்லீப்பர்ஸ்; நாங்கள் அவேர்னஸ்(விழிப்பு உணர்வு) கொண்டு உள்ளோம் என்றும் , தினகரன் அணி தூங்கிக்கொண்டிருக்கிறது அவர்களைப் பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தங்கள் அணி பெரும்பான்மை கொண்டு பலமாக இருப்பதாகவும், 2021ல் கூட அதிமுக ஆட்சி அமைக்கும், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications