மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆட முடியாது.. அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்
மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் நாங்கள் ஆட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் நாங்கள் ஆட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சி கொள்கைப்படியே அதிமுக செயல்படும் என்றும் அவர் கூறினார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். காவிரி விவகாரத்தில் அதிமுக ஜனநாயக ரீதியில் போராடி வருவதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும் ஜெயக்குமார் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீருவோம் என்றும் அதுவரை ஓயப்போவதில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் தமிழக நலனுக்காக அதிமுக அரசு உணர்வுப்பூர்வமாக போராடும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.மத்திய அரசு கூறுவதை எல்லாமல் தமிழக அரசு ஏற்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தங்கள் கட்சி கொள்கைப்படியே அதிமுக செயல்படும் என கூறியுள்ளார். மேலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும் என்றும் ஜெயக்குமார் கண்டித்தார்.


Click it and Unblock the Notifications
