நாங்களா கேட்டோம் முதல்வர் பதவி.. தம்பிதுரை எல்லாம் ஒரு ஆளா.. வறுத்தெடுத்த கேபிஎம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் பதவியை எங்களுக்கு தாருங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. எதற்காக கேட்காததை கூறுகிறீர்கள் என்று கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

அதிமுக இணைவு குறித்து எடப்பாடி அணியை சேர்ந்தவர்கள் அன்றாடம் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் பதவி, பொதுச் செயலாளர் பதவி ஆகியவற்றை தனக்கு வேண்டும் என்று ஓபிஎஸ் அடம் பிடிப்பதால்தான் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுவதாக செய்திகள் வெளியாகின.

We dont want CM post, says OPS team

இந்நிலையில் இன்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களின் ஆலோசனை கூட்டம் கிரீன்வேஸ் சாலையில் ஓ.பி.எஸ். வீட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் கே.பி.முனுசாமி தெரிவிக்கையில், நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்தகாக கூறிய தம்பிதுரை, முதல்வராக எடப்பாடியே செயல்படுவார் என்கிறார்.

முதல்வர் பதவியை தாருங்கள் என்று நாங்கள் கேட்டோமா? எதற்காக கேட்காத ஒரு விஷயத்தை சொல்கிறீர்கள்? நாங்கள் கேட்டது ஒன்று , நீங்க சொல்வது ஒன்று. தம்பிதுரையை யாரும் மதிப்பதில்லை. ஒரு பேட்டி அளித்தாலும் அவர் தனியாகவே தருகிறார். கட்சியில் நாம் இருப்பதாக காட்சி கொள்வதற்காகவே இப்படி செய்கிறார் என்று முனுசாமி விமர்சித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
K.P.Munusamy says our team leader OPS doesnt want CM post, then why thambidurai spoke like that?
Please Wait while comments are loading...