100 சதவீதம் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும்.. அய்யாக்கண்ணு கோரிக்கை
100 சதவீதம் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி அளித்துள்ளார்.
நாகப்பட்டினம்: 100 சதவீதம் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி அளித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்திரிபுலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு 100 சதவீதம் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 16 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கத்திரிபுலத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். வேதாரண்யம் கத்திரிபுலம் விவசாயிகள் 69-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் பேச்சு வார்த்தை நடத்த இதுவரை யாரும் வரவில்லை. விவசாயிகள் முரண்டு பிடித்தால் சாப்பாடு கிடைக்காது என்பதை அரசு உணர வேண்டும். இன்னும் 15 நாட்களுக்குள் பயிர் காப்பீடு தொகையை வேதாரண்யம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமை செயலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications