ஜெ.வை எதிர்த்தோம், ஆனால் டிடிவி தினகரனை போல துரோகம் செய்யவில்லை... ஸ்டாலின் பேச்சு

ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்த்தோம், ஆனால் துரோகம் செய்யவில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்த்தோமே தவிர, அவருக்கு துரோகம் இழைக்க வில்லை. அவ்வாறு செய்தவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆர்.கே. நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து நேற்று ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்கான இடைத்தேர்தலை பெரா மாபியா கும்பலும், மணல் மாபியா கும்பலும் சந்திக்கின்றன. இந்த தேர்தலானது நாட்டையே புரட்டி போடக் கூடிய தேர்தலாக உள்ளது.

 உதய சூரியன் பிரகாசிக்கும்

உதய சூரியன் பிரகாசிக்கும்

இந்த தேர்தலில் உதயசூரியன் நிச்சயம் பிரகாசித்து உதிக்க போகிறது என்பதை இந்த கூட்டத்தின் மூலம் கண்கூடாக தெரிகிறது. ஜெயலலிதாவின் மரணத்தின் போது ஓரணியில் இருந்தவர்கள் இன்று இரு அணிகளாக பிரிந்து விட்டனர். மாறி மாறி கொள்ளை அடித்து தமிழகத்தையே குட்டிச்சுவராக்கிவிட்டனர்.

 வெளிநாட்டு சிகிச்சை இல்லை

வெளிநாட்டு சிகிச்சை இல்லை

அப்பல்லோவில் 75 நாள்களாக சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை வெளிநாட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லக் கூடாது என்று தடை போட்ட சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் ஓரணியாக இருந்தனர். தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை இரண்டு அணிகளாக சந்திக்கின்றனர்.

துரோகம்

துரோகம்

ஜெயலலிதாவின் அரசியல் விவகாரங்களை எதிர்த்தோமே தவிர அவருக்கு நாம் துரோகம் செய்யவில்லை. அவ்வாறு செய்தவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும். அவர்களே தங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்ததால் அவரால் விரட்டியடிக்கப்பட்டவர்தான் இந்த ஃபெரா புகழ் தினகரன்.

 பண மோசடி

பண மோசடி

கடந்த 2011-ஆம் சட்டசபை தேர்தலில் சீட் மோசடியில் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர்தான் ஓ.பன்னீர் செல்வம். அப்போது போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று நினைத்தேன். ஆனால் எப்படியோ ஜெய.வை சமாதானம் செய்து வந்துவிட்டார்.

 அவசர பதவியேற்பு

அவசர பதவியேற்பு

ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்தததாக சொல்கிறார்கள். அன்று இரவே அவசர அவசரமாக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை கூட்டி, முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்றார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பன்னீர் செல்வம் ஏன் அப்போதே நீதி விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்று சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+