சிம்புவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சதி: போஸ்டர் ஒட்டிய திண்டுக்கல் ரசிகர்கள்
திண்டுக்கல்: பீப் பாடலுக்காக சிம்புவை கைது செய்யக்கோரி பெண்கள் அமைப்பினர் போராடி வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து அவருடைய ரசிகர்கள் திண்டுக்கல்லில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
சிம்பு பாடியதாக இணையதளத்தில் பீப் பாடல் ஒன்று வெளியானது. அதில் ஆபாச வார்த்தைகள் அதிகம் இருப்பதாகக் கூறி பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் சென்னை, கோவை ஆகிய நகரங்களில் சிம்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சிம்புவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது ரசிகர்கள் திண்டுக்கல்லில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்களில் கூறியிருப்பதாவது,
வன்மையாக கண்டிக்கிறோம்
சாதிக்கப் பிறந்தவர் மனிதனால் சோதிக்கப்படுகிறார்
எங்கள் தலைவர் எஸ்.டி.ஆரின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பீப் பாடலை வெளியீடு செய்த சதிகார கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம்
இவன்- திண்டுக்கல் மாவட்ட எஸ்டிஆர் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications