சசிகலா சபதத்தை நிறைவேற்றி விட்டோம்.. டி.டி.வி. தினகரன் !
சசிகலாவின் சபதத்தை நிறைவேற்றியுள்ளோம் என அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சட்டப்பேரவையில் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று சசிகலாவின் சபதத்தை நிறைவேற்றிவிட்டோம் என அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பெரும் அமளி மற்றும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அவருக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 11 எம்எல்ஏக்கள் எதிராக வாக்களித்துள்ளனர் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அதிமுகவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், சசிகலாவின் சபதத்தை நிறைவேற்றியுள்ளோம். ஜெயலலிதா அரசை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வந்து வெற்றி பெற்றுள்ளோம் என்று கூறினார்.
அ.தி.மு.க-வின் எதிர்க்கட்சியான திமுக-வோடு மறைமுக உறவு வைத்திருந்தவர்களை எப்படி மன்னிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். பன்னீர்செல்வம் திமுகவோடு கூட்டு வைத்துள்ளார் என்பது இன்றைய நிகழ்வுகளால் உறுதியாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications