2ம் தேதி மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிப்போம்.. பிரேமலதா விஜயகாந்த்

விழுப்புரம் மாவட்ம் உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள எறஞ்சி என்ற இடத்தில் தேமுதிகவின் மாநில மாநாடு பிப்ரவரி 2ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. இதில்தான் லோக்சபா தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி சேரும் என்ற விவரத்தை கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிக்கவுள்ளதாக ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விஜயகாந்த் எடுக்கப் போகும் முடிவு என்ன என்று தெரியாமல் அக்கட்சியைக் கூட்டணிக்கு இழுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் திமுகவும், பாஜகவும் டென்ஷனாக உள்ளன.
இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த், மாநாட்டு ஏற்பாடுகளைப் பா்ர்வையிடுவதற்காக வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எறஞ்சியில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படியாக மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை. ஆனால் கண்டிப்பாக அனுமதி பெற்றுதான் மாநாட்டை நடத்துவோம்.
செஞ்சி கோட்டை வடிவில் உள்ள முகப்பு வாயிலுடன் இந்த மாநாட்டை நடத்துகிறோம். எனவே 2016ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று சென்னை கோட்டையில் தேமுதிக ஆட்சி நடைபெறும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தல் குறித்து கேப்டனின் முடிவை இந்தியாவே எதிர்பார்த்து கொண்டுள்ளது. தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு கூட்டணி குறித்து தேமுதிகவின் முடிவு மாநாட்டில் அறிவிக்கப்படும்.
டெல்லி ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடத்துக்கு தேமுதிக போட்டியிடுவதால் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவேதான் தேமுதிக வேட்பாளரை நிறுத்தவில்லை என்றார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications