முதல்ல தேர்தல் தேதி அறிவிக்கட்டும், கூட்டணி குறித்து சொல்கிறேன் - விஜயகாந்த்

2012ம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பலமுறை அவர் ஆஜராகத் தவறியதால் சமீபத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று கோர்ட்டில் ஆஜரானார் விஜயகாந்த். ஆஜரான பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக அரசு என் மீது பொய்யான வழக்குகளை தொடர்ந்துள்ளது. அனைத்து வழக்குகளையும் சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன். என் மீது 50 முதல் 60 வழக்குகள் வரை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. ஜெயலலிதா என் மீது தொடரும் வழக்குகளுக்கு அஞ்சமாட்டேன்.
மக்களை சந்திப்பதற்காக ஜெயலலிதாவே என்னை அனுப்பி வைக்கிறார். இதனால், மக்களை சந்திப்பதில் சந்தோசமாக இருக்கிறது.
கனிம மணல் எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது தாமதமான செயல். கனிம மணல் கடத்தலை தடுக்க கடந்த ஆண்டே நான் வலியுறுத்தியிருந்தேன்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications