இந்துக்களின் மானம் காக்க அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்: தொகாடியா
Subscribe to Oneindia Tamil
சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் மட்டுமே இந்துக்களின் மானம், மரியாதை காக்கப்படும் என வி.எச்.பி. தலைவர் தொகாடியா கூறியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் வி.எச்.பி. அமைப்பின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் அந்த அமைப்பின் தலைவர் தொகாடியா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் மட்டுமே இந்துக்களின் மானம், மரியாதை காக்கப்படும். இந்து மாணவர்களுக்கான இலவச விடுதிகளை 400ஆக உயர்த்துவது, 20 லட்சம் குழந்தைகளுக்கு இலவச கல்வி, 50 ஆயிரம் மருத்துவர்களை நியமித்து இந்துக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை என பல்வேறு திட்டங்களை வி.எச்.பி. செயல்படுத்த உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications