ஜெ. மரணம் பற்றி கேள்வி.. ஸ்டாலினுக்கு சட்டசபையில் பதில் அளிப்போம்: செங்கோட்டையன்
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக் கோரும் மு.க.ஸ்டாலினுக்கு உரிய பதிலை சட்டசபையில் அளிப்போம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டசபையில் உரிய பதில் அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஓபிஎஸ் அணியினர் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், அரசியல் ஆதாயத்துக்காக ஓபிஎஸ் அணியினர் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான விஷயத்தை கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோரிக்கை வலியுறுத்தும் மு.க.ஸ்டாலினுக்கு உரிய பதிலை சட்டசபையில் அளிப்போம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications