'நீங்கள் யூகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி': வைகோ பேச்சு
சென்னை: 'நீங்கள் யூகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்' என, மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை தாயகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வைகோ பேசியது குறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
மதிமுக உயர்நிலைக்குழு, ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில்,"லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க எனக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது' என, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்தார்.

மதிமுகவுக்கு பரிட்சை
தேர்தல் கூட்டணி குறித்து, நீங்கள் யூகிக்கும் கட்சிளுடன் தான் அமையும். இந்த லோக்சபா தேர்தல் ம.தி.மு.க.,வுக்கு ஒரு பரீட்சை தான்.
2016ல் ஆட்சி
நமது இலக்கு, 2016ல் ஆட்சியை பிடிப்பது தான். அதில் நாம் வெற்றி பெறுவோம். தமிழருவி மணியன் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.
வாகனப் பிரச்சாரம்
இம்மாதம், 30ம் தேதி, அடுத்த மாதம், 1ம் தேதி தூத்துக்குடியில் வாகன பிரசாரத்தை நடத்துகிறேன். ம.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில், 50 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அக்குழுவினர், தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலின் பெயர்களை சரிபார்க்க வேண்டும்.
எந்தெந்த தொகுதிகள்
எந்தெந்த தொகுதிகளில் ம.தி.மு.க., போட்டியிடும் என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை;அந்தந்த மாவட்ட செயலர்களிடம் இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிப்பேன்.
யூகிக்கும் கட்சியுடன்
எக்காரணத்தை கொண்டும் காங்கிரஸ், தி.மு.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.
லோக்சபா தேர்தலுக்கு நான் தயாராகி விட்டேன். நீங்களும் தயாராகுங்கள். நீங்கள் யூகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் இவ்வாறு, வைகோ பேசினார்.
மாவட்டச் செயலாளர்கள்
கூட்டத்தில் மாவட்டச் செயலர்களை பேச அனுமதிக்கவில்லை. கட்சியின் பொதுச்செயலர் வைகோ மட்டுமே பேசினார். இதனால், கட்சியின் பலம், பலவீனம் குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள், உட்கட்சி பிரச்னை, மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பிரச்னை, லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்த கருத்துக்களை, மாவட்டச் செயலர்கள் சுதந்திரமாக தெரிவிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications