மத்திய அரசை எதிர்ப்பதை விட காரியத்தை சாதிப்பது தான் முக்கியம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மத்திய அரசை எதிர்ப்பது நோக்கமல்ல; தமிழர்களுக்கான காரியத்தை சாதிப்பதே முக்கியம் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை : மத்திய அரசைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல ; தமிழர்களுக்கான காரியத்தைச் சாதிப்பது தான் முக்கியம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்பில் சொல்லியுள்ளது போன்று, காவிரி மேலாண்மை வாரியத்தை கொடுக்கப்பட்ட ஆறு வார கால அவகாசத்திற்குள் மத்திய அரசு அமைக்கவில்லை.

இதனையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராடி வருகின்றன.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமையாததற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தராததே காரணம் என்றும், பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டனர் என்றும் தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், மதுரையில் பேசிய தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக அரசு நிச்சயம் காவிரியில் தமிழருக்கான உரிமையைப் பெற்றுத்தரும் என்றும், எந்த இடத்திலும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்களை நடக்கவிடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.சியு.,வில் இருந்த கட்சியை எழுந்து ஒலிம்பிக்கில் ஓட வைத்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எனவே, தமிழர்களுக்கான உரிமையை நிச்சயம் அவர் மீட்டுத்தருவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மற்றவர்களைப் போல கண் மூடித்தனமாக மத்தி அரசை எதிர்ப்பது தங்கள் நோக்கம் இல்லை என்றும், தமிழர்களுக்கான காரியத்தைச் சாதிப்பது மட்டும் தான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications