காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கு ம.தி.மு.க. ஆதரவு கிடையாது: வைகோ
கோவில்பட்டி: காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளிக்கும் கட்சிக்கு மதிமுக ஆதரவு கிடையாது என வைகோ தெரிவித்துள்ளார்.
மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மதுவை ஒழிக்க வலியுறுத்தி சுமார் 1,200 கி.மீ. நடைப்பயணத்தை மேற்கொண்டேன். மக்களுக்காகவும், மக்கள் பிரச்சனைகளுக்காகவும் முல்லைத் தீவு, ஸ்டெர்லைட் பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனை, நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக மதிமுக போராடி வருகிறது.

தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு கேடு விளைவித்த காங்கிரஸ் அரசைதேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளிக்கும் கட்சிக்கு மதிமுக ஆதரவு கிடையாது.
வருகின்ற தேர்தலில் வாக்களிக்கும் போது சிந்தித்து நேர்மையாக அரசியல் நடத்திவரும் எங்களுக்கு வாக்களித்து ஆதரவு தாருங்கள். மக்களை நம்பி போட்டியிடும் எங்களுக்கு நல்லதொரு பலத்தை தாருங்கள் என பேசினார்.
தொடர்ந்து மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, இடைசெவல், வில்லிசேரி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மறுமலர்ச்சிப் பயணத்தை மேற்கொண்டார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications