For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும்.. சி.இ.ஓ. அறிவிப்பால் புதிய பரபரப்பு

ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும்..சி.இ.ஓ. அறிவிப்பு!- வீடியோ

    டெல்லி: ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி அளித்துள்ளார்.

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த கொடூரமான காப்பர் ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் 2 வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

    இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். இன்னும் 60 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காணாமல் போன பலர் இன்னும் வீடு வந்து சேரவில்லை.

    ஸ்டெர்லைட் மூடல்

    ஸ்டெர்லைட் மூடல்

    எதிர்ப்புகளை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது. இதுமக்கள் மத்தியில் பெரிய சந்தோசத்தை உண்டாக்கியுள்ளது.ஸ்டெர்லைட் நிறுவனம் இதற்கு எதிராக வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளது.

    மீண்டும்

    மீண்டும்

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி அளித்துள்ளார். ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும். இப்போது மூடப்பட்டு இருப்பது தற்காலிகமானதுதான். விரைவில் ஸ்டெர்லைட் பணியாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றுள்ளார்.

    பராமரிப்பு

    பராமரிப்பு

    தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்த பின் மீண்டும் ஸ்டெர்லைட் இயங்க தொடங்கும். தூத்துக்குடியில் அசாதாரண நிலை நிலவி வருகிறது. தூத்துக்குடியில் அமைதி திரும்ப காத்திருக்கிறோம். அமைதி திரும்பிய பின் கண்டிப்பாக ஸ்டெர்லைட் செயல்படும் என்றுள்ளார்.

    யார் காரணம்

    யார் காரணம்

    மேலும் தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும்தான் காரணம். மக்கள் ஆலையை எதிர்க்கவில்லை. தொண்டு நிறுவன தூண்டுதலின் பெயரில்தான் ஆலை செயல்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடியில் ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்; இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றுள்ளார்.

    English summary
    We will open Sterlite again in one or two weeks says CEO of the Factory in Delhi. He also added that, Anti Social elements and NGO organised the riot in the Protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X