மழைக் காலத்தில் கல்யாணம் வச்சா.. "ரெய்ன்" வராம "ரெய்னா"வா வருவாரு...!
தாராபுரம்: திருப்பூரில் மழை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் கல்யாணம் செய்து வைத்த ஒரு மணி நேரத்தில் மழை பெய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சங்கரெண்டாம் பாளையம், தாளக்கரை, எரிசனம்பாளையம் உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். விவசாயத்துக்கு மழை மற்றும் கிணற்று நீரையே இப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் இந்த கிராமங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 7 கிராம மக்களும் ஒன்று கூடி மழை பெய்ய வருண பகவானுக்கு வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி அரச மரத்துக்கும், வேம்பு மரத்துக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி எரிசனாம்பாளையம் தலைவர் முத்துச்சாமி தலைமையில் திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு 7 கிராம மக்களுக்கும் வீடு வீடாக வினியோகம் செய்யப்பட்டது.
அதன்படி நேற்று காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் அரச மரத்துக்கும், வேம்பு மரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. சங்கரெண்டாம் பாளையம் பட்டக்காரர் பாலசுப்ரமணிய பெரியண்ண உடையார் சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்தார்.
அதன்பின்னர் மங்கள வாத்தியங்கள் இசைக்க 2 புரோகிதர்கள் மந்திரம் முழங்க அரச மரத்துக்கும், வேம்பு மரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் விருந்து நடைபெற்றது.
திருமணம் முடிந்த 1 மணி நேரத்துக்குள் தாராபுரம் சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. இது 7 கிராம மக்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
மழைக் காலத்தில் கல்யாணத்தை வச்சா.. "ரெய்ன்" வராம "ரெய்னா"வா வருவாரு...நல்லா கிளப்புறீங்கய்யா பீதியை!
-
60 வயதிலும் ஆசை வரும்.. நடிகர் அமீர்கான் 61 வயதில் 3வது திருமணம்.. யார் இந்த 47 வயது காதலி கவுரி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications