சென்னையைத் தொடர்ந்து மதுரையையும் கலக்கிய ஜல்லிக்கட்டு பேரணி #WeNeedJallikattu
மதுரை: ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி இன்று மதுரையில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி நேற்று சென்னையில் மாபெரும் பேரணி நடந்தது. மெரினா கடற்கரையில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று மதுரையில் பேரணி நடைபெறுகிறது. இது குறித்து ஏறு தழுவுதல் பாதுகாப்பு போராட்டக்குழு ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ள அழைப்பில் கூறியிருப்பதாவது,
இன்று 9. 1. 2017 காலை 10 மணி அளவில் கோரிப்பாளையம் தேவர் சிலையில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை சென்று ஏறு தழுவுதலுக்கு அனுமதி வேண்டி மனு கொடுக்கும் போராட்டத்திற்கு மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள், பல்வேறு அமைப்புகள், ஆட்டோ ஓட்டுனர்கள், தமிழர் பண்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், ஏறு தழுவுதல் ஆர்வலர்கள், காளை வளர்ப்போர்கள், விவசாயிகள், தமிழனின் அடையாளத்தையும், பண்பாட்டையும் அழித்து விட்டால் இத்தமிழ் சமூகத்தை அழித்து விடலாம் என கங்கணம் கட்டிக் கொண்டு தமிழர் பண்பாட்டு விளையாட்டிற்கு தடை வாங்கியவர்களுக்கு எதிராக தமிழினத்தின் ஒற்றுமை குரலை ஓங்கி ஒலித்திட மதுரையில் ௯டிடுவோம்.
நம்மால் முடியாதது எவரால் முடியும் ... தமிழ் இனமே திரண்டு வா.... 9 1 2017 அன்று ஒரு நாள் தமிழ் இன பண்பாட்டை காத்திட நேரத்தை ஒதுக்கீடு செய்திடுவீர் ... கரம் கோர்ப்போம் ... களம் அமைப்போம் ... நமது அடையாளங்கள் அழிந்திட நாம் வேடிக்கை பார்க்க வேண்டாம் ...
தொடர்புக்கு:
ஶ்ரீவை. எம் .எஸ். ராஜா
9366666008
8072045640
ஒருங்கிணைப்பாளர்
ஏறு தழுவுதல் பாதுகாப்பு போராட்டக்குழு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அறிவித்தபடி இன்று மதுரையில் பேரணி நடந்தது. பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோரிப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமிடப்பட்டது.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications