ரூ. 1000 போதும்.. மத்திய அரசின் "மகளிர் சம்மான் சேமிப்பு சான்றிதழ்".. பெண்களுக்கான டெபாசிட் திட்டம்
சென்னை: மகளிர் சம்மான் சேமிப்பு சான்றிதழ் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதனால் பெண்களுக்கு கிடைக்க போகும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.. தற்போது, நம் தமிழ்நாட்டில் செல்வமகள் சிறப்பு திட்டம் திறன்பட செயல்பட்டு வருகிறது.
மெச்சூரிட்டி பணம்: அதாவது, உங்கள் பெண் குழந்தை வளர்ந்தபிறகு, அவருக்கான கல்வி, தொழில், திருமணம் போன்ற தேவைகளுக்கு இப்போதே சேமிக்க செல்வமகள் சேமிப்பு திட்டம் மிகச்சிறந்த வழிமுறையாகும்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தையும் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இந்த திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பணத்தை டெபாசிட் செய்துவர வேண்டும். 21 ஆண்டுகளில் மெச்சூரிட்டி பணம் கிடைக்கும்.
இந்தியாவில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதாவது, 10 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகளின் உயர்கல்விக்கு பணம் சேர்க்க விரும்புகிறவர்கள், பணம் நீண்டகாலம் கழித்து தேவை என்றால் முதலீடு மற்றும் வட்டி வருமானம் இரண்டுக்கும் வருமான வரிச் சலுகை அளிக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 8% வட்டி வழங்கப்படுகிறது.
பெண் குழந்தை:
எனினும், இந்த செல்வமகள் சிறப்பு திட்டத்தில், 10 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும்... ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும். ஆனால், மத்திய அரசின் "பெண்கள் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்" அப்படி கிடையாது.. பெண்களுக்காகவே, பிரத்யேகமாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியதுதான், இந்த "மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்" (Mahila Samman Savings Certificate) திட்டமாகும்..
பெண்கள் யார் வேண்டுமானாலும் இந்த கணக்கை துவங்கலாம்.. வயது வரம்பு எதுவும் கிடையாது. 18 வயதுக்கு உட்பட்ட மைனர் பெண் குழந்தைகள் தங்களின் பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் முதலீடு செய்யலாம்.
2025 மார்ச் 31-ம் தேதிக்கு முன், பெண்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம். படிவம் 1-ஐ நிரப்பித்தந்து முதலீடு செய்யலாம். சிறப்பு வாய்ந்த இந்த சிறுசேமிப்பு திட்டத்தை, நடந்து முடிந்த மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
சேமிப்பு திட்டம்: "மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்" (Mahila Samman Savings Certificate) என்று சொல்லப்படுகிற இந்த திட்டத்தில், பெண்கள் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம்வரை சேமிக்க முடியும்... வருடத்துக்கு 7.5% வட்டி தரப்படுகிறது. இந்த திட்டம் 2025 மார்ச் 31 வரையிலான இரண்டு வருட காலத்துக்கு நடைமுறையில் இருக்கும்.
நாட்டிலுள்ள 1.59 லட்சம் தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளின் முக்கிய கிளைகள் மூலம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. நாட்டிலுள்ள 1.59 லட்சம் அஞ்சல் நிலையங்களிலும், இந்த மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்கள் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு:
ஒருவர் குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி, அதிகபட்சமாக 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டை 100-ன் மடங்குகளில் தான் செய்யமுடியும். டெபாசிட்டை துவங்க ஆதார், பான் ஆவணங்கள் முக்கியம்.. இவை இரண்டுமே இணைக்கப்பட்டிருப்பதும் அவசியம்.
3 மாதத்துக்கு ஒருமுறை வட்டி, கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தில் டெபாசிட் தொகை, முதலீடு செய்த தேதியிலிருந்து 2 வருடங்கள் கழித்து முதிர்வடையும். படிவம் 2-ஐ நிரப்பிக் கொடுத்து அதைப் பெற்றுக் கொள்ளலாம். டெபாசிட்டை ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்த பிறகு, கணக்கிலிருக்கும் தொகையில் அதிகபட்சமாக 40 சதவிகித தொகையை எடுத்துக் கொள்ளலாம்.

டெபாசிட் போட்டவர் 2 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டால், அப்போது முழுத்தொகையும் வழங்கப்பட்டு விடும். அதேபோல, டெபாசிட் போட்டிருப்பவருக்கு உயிருக்கு ஆபத்தக்கூடிய நோய்கள் ஏற்பட்டால் மருத்துவ உதவிக்கு இந்த டெபாசிட் பணத்தை எடுத்து கொள்ளலாம்.. பிள்ளைகளுக்காக முதலீடு செய்து வரும் பெற்றோர் அல்லது காப்பாளர் இறந்துவிட்டாலும், பாதியிலேயே முழுப்பணமும் தரப்பட்டுவிடும்.
வருமானவரி:
ஆனால், இந்த 2 காரணங்கள் தவிர, டெபாசிட் ஆரம்பித்து 6 மாதங்களுக்குப் பிறகு கணக்கை முடித்துக்கொள்ள அனுமதிக்கப்படும். அப்போது 2 சதவிகித அபராத வட்டி கழிக்கப்பட்டு, அது வரைக்குமான காலத்துக்கு 5.5% வட்டி வழங்கப்படும்.
இது மத்திய அரசின் திட்டம் என்பதால் முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு 100% உத்தரவாதம் இருக்கிறது. இந்த டெபாசிட்டில் செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச் சலுகை எதுவும் கிடையாது. அதேபோல், வட்டி வருமானத்துக்கும் வரிச் சலுகை கிடையாது.. ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications