அஸ்திரத்தை எடுத்த ஓபிஎஸ்... பெரிய குண்டை தூக்கி போட்ட புகழேந்தி.. அதுவும் எடப்பாடி பழனிசாமி மீதே!
சேலம்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என எந்த இடத்திலும் தேர்தல் ஆணையம் குறிப்பிடவில்லை என்றும், அதிமுக அவருக்கு சொந்தம் என்று எங்குமே கூறவில்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், "முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் உத்தரவுப்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், தர்மபுரி மாவட்டம், சேலம் மாவட்டம், இப்படி பல இடங்களில் தொடர்ந்து கிட்டத்தட்ட 11 மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

கழக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் ஜேசிடி பிரபாகரன், அருமைக்குரிய நண்பர் மனோஜ் பாண்டியன், கழக கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் போன்ற அனைவரும் கலந்து கொண்டு வருகிறார்கள். நாங்களும் கலந்து கொண்டு வருகிறோம்.
இப்போது என்ன பிரச்சனை என்று கேட்டீங்கனா, கழக வளர்ச்சி குறித்தும், மாநாடு குறித்தும் கூட்டம் நடைபெறுகிறது. எல்லா இடத்திலும் போய் ஒபிஎஸ் அணியினர கொடியை கட்ட விடாத, அப்படீன்னு சொல்லி எடப்பாடியில பெரிய பிரச்சனையை பன்றது, காவல்துறைக்கு தவறான புகாரை அளிப்பது, இந்த வேலைகளை தூண்டிவிட்டு, அதோடு நிறுத்துனா பரவாயில்லை. பழனிசாமி செய்றது எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு..
பழனிசாமி பழனிசாமி நீயும் நானும் மோதிக்கிலாம்.. நீயும் அண்ணன் ஓபிஎஸ்சும் மோதிக்கலாம்..தப்பில்ல.. வழக்கு மன்றத்துல போய் மோதிக்கலாம்.. அதுவும் தப்பில்லை.. ஆனால் உனக்கு தான் கட்சி, எனக்கு தான் கட்சி அப்படீன்றதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். எந்த உத்தரவும் தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை.. திரும்ப திரும்ப நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

தேர்தல் ஆணையத்தில் நீங்கள் அனுப்பிய லெட்டரை எங்களுடைய ரெக்காட்டில் பதிவு செய்து கொண்டோம் அப்படீன்னு சொல்லித்தான் செக்ரட்டரி சொல்லியிருக்காரு.. மாறாக ஏப்ரல் மாதத்தில் உன்னை வந்து பொதுச்செயலாளராகவோ, எந்த இடத்திலுமே இரட்டை இலையும் கட்சியும் உனக்கு சொந்தம் என்றோ சொல்லவில்லை. அப்படி வெப்சைட்ல சொல்லியிருந்தா தயவு செய்து ரிலீஸ் பண்ணு.. நானும் பார்த்துக்கிறேன். என்கிட்ட ஆதாரம் இருக்கு.. அதை வைத்துத்தான் பேசுகிறேன்" இவ்வாறு புகழேந்தி கூறினார்.
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications