ரஜினி 1996ல் கட்சி ஆரம்பித்திருந்தால் கூட இப்போ மாதிரி அதிக ஓட்டு கிடைச்சிருக்காது.. ஏன் தெரியுமா?
ரஜினி 1996-இல் கட்சி ஆரம்பித்திருந்தால் கூட இப்போ மாதிரி அதிகமாக வாக்குகள் கிடைத்திருக்காது என்று ஒரு ரசிகர் கூறுகிறார்.
Recommended Video

சென்னை : ரஜினி 1996-இல் கட்சி ஆரம்பித்திருந்தால் கூட இப்போ மாதிரி அதிக ஓட்டு கிடைத்திருக்காது என்று கூறிய ரசிகரிடம் ஏன் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் சிரிப்பை வரவழைத்தது.
கடந்த 1991-96-இல் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவர் செய்து வைத்த ஆடம்பர திருமணத்தால் தமிழகமே அதிருப்தியில் இருந்தது. காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தது.

அந்த சமயத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று பத்திரிகை நண்பர்களும், ரசிகர்களும் அவரை அழைத்தனர். ஆனால் அவரோ திமுக- தமாகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்.
இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இவரை வரசொன்னால் வாய்ஸ் மட்டும் கொடுக்கிறாரே என்று அனைத்து தரப்பினரும் ஆதங்கப்பட்டனர். ஆனால் இன்று 20 ஆண்டுகளுக்கு பிறகு அரசியலுக்கு வருவதாக ரஜினி கூறியுள்ளார்.
ரஜினி ரசிகர்களின் உற்சாகப் பேட்டிகள் செம சுவாரஸ்யம்!
— SKP Karuna (@skpkaruna) December 31, 2017
அதுலே ஒருத்தர் சொல்றாரு! அப்போ தலைவர் கட்சி ஆரம்பிச்சிருந்தா நான் மட்டும்தான் ஓட்டுப் போட்டிருப்பேன்! இப்போ ஆரம்பிக்கிறதாலே என் பேரன், பேத்திலாம் ஓட்டுப் போடுவாங்கன்னு.. 👌👌
இதுகுறித்து ரசிகர்களின் உற்சாக பேட்டியில் சுவாரஸ்மான ஒன்று அடையாளம் காணப்பட்டது. அதை டுவிட்டர்வாசி ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில் , ரஜினி ரசிகர்களின் உற்சாகப் பேட்டிகள் செம சுவாரஸ்யம்! அதுலே ஒருத்தர் சொல்றாரு! அப்போ தலைவர் கட்சி ஆரம்பிச்சிருந்தா நான் மட்டும்தான் ஓட்டுப் போட்டிருப்பேன்! இப்போ ஆரம்பிக்கிறதாலே என் பேரன், பேத்திலாம் ஓட்டுப் போடுவாங்கன்னு.. என்று ரசிகர் தெரிவித்ததாக இந்த டிவிட்டர்வாசி தெரிவித்துள்ளார்.
இதை படிக்கும் போது ரசிகர்களின் லாஜிக்கோ லாஜிக் என்று சிரிப்புதான் வருகிறது.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications