சினேகாவுக்கு வந்த திடீர் காதல்.. இளைஞருடன் ஒரே ஓட்டம்.. கடைசியில் வயல்வெளியில் அலறிய மாமனார்..!
முன்விரோதம் காரணமாக மாமனாரை அடித்து கொன்றார் மாப்பிள்ளை
ராணிப்பேட்டை: ஒரு வருடத்திற்கு முன் காதலனுடன் மகள் ஓடிச்சென்ற விவகாரம் புகைந்து கொண்டே வந்த நிலையில், திடீரென ஒரு கொலையில் வந்து முடிந்துள்ளது..!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன்.. இவர் ஒரு விவசாயி.. 45 வயதாகிறது.. திருமணமாகி 2 மகன்கள், 2 மகள்கள் இருக்கிறார்கள்...
மூத்த மகள்தான் சினேகா.. இவருக்கு மாப்பிள்ளை ஒருவரை பார்த்து, அப்பா சசிதரன் முடிவு செய்து வைத்திருந்தார்.. ஆனால், சினேகாவுக்கு பக்கத்து ஊரான கீராம்பாடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது..

குழந்தை
இதனால், திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென வீட்டை விட்டு ஓடிப்போய் காதலனை திருமணம் செய்து கொண்டார். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. பக்கத்து பக்கத்து கிராமத்திலேயே இருந்தாலும், அப்பாவை சந்திக்க சினேகா போவதில்லை.. இவர்களுக்கு கீழம்பாடி பகுதியில் 13 ஏக்கர் விவசாய நிலம் பொதுவாக உள்ளது.. அதனால், அடிக்கடி அப்பகுதிக்கு வந்து செல்லும்போது இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது...

வாக்குவாதம்
அந்த வகையில், இன்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச வந்த சசிதரன் சென்று கொண்டிருந்தார்.. அந்த வழியாக மருமகன் விக்னேஷும் வந்தார்.. நேருக்கு நேர் சந்தித்து கொண்டபோது மறுபடியும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கொலை
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விக்னேஷ், அவருக்கு அண்ணன் தம்பி முறை உடைய மூன்று நபர்களுடன் கடப்பாறை மற்றும் கத்தியை கொண்டு வந்து மாமனாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.. இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விவசாய பகுதியில் போராடினார் சசிதரன்.. அவரது சத்தத்தை கேட்டு அங்கிருந்தோர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சசிதரன் இறந்துவிட்டார்.

வழக்கு பதிவு
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆற்காடு கிராமிய காவல்துறையினர் விக்னேஷ் மற்றும் பசுபதி ஆகியோரை கைது செய்துள்ளனர்.. மேலும் சௌந்தர்ராஜன் லோகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.. காதல் திருமணத்தால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மருமகனே மாமனாரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications