ஓ.கே.. அம்மா போய்ட்டாங்க. ஆளுக்கு ஒரு தாரைப் பிடிச்சு இழுங்கப்பா...!
கரூர்: கரூரில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய பிறகு மக்கள் வாழைப்பந்தலை பிரித்துவிட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதல்வர் ஜெயலலிதா கரூரில் பிரச்சாரம் செய்தார். கரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
ஜெயலலிதா பேசிய கூட்டத்திற்கு தம்பிதுரை வரவில்லை.

பெயர்
தேர்தல் ஆணையம் கடும் விதிமுறைகள் விதித்துள்ளதால் அண்மை காலமாக ஜெயலலிதா வாக்காளர்களின் பெயரைக் கூறாமலேயே பிரச்சாரம் செய்கிறார். கரூரிலும் தம்பிதுரையின் பெயரை அவர் கூறவே இல்லை.

வாழைப்பந்தல்
ஜெயலலிதா பிரச்சாரம் செய்த மேடை அருகே பிரமாண்டமான வாழைப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஏராளமான வாழைத்தார்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

ஹெலிகாப்டர்
ஜெயலலிதா பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் கிளம்பிச் சென்றார். அவர் சென்ற ஹெலிகாப்டரை புகைப்படம் எடுக்க அங்கு கூடியிருந்த மக்கள் முந்தியடித்தனர்.

வாழைத்தார்கள்
ஜெயலலிதா கிளம்பியவுடன் அங்கு கூடியிருந்த மக்கள் அடித்துப் பிடித்து வாழைப்பந்தலை பிரித்துவிட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாழைத்தார்களை எடுத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications