ஆபரேஷன் அக்னி.. கொடைக்கானலில் ஸ்டாலின் போடும் பிளான்.. 5 முக்கிய திட்டம்.. பதறி நிற்கும் தலைகள்
கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில திட்டங்களை வகுத்து வருகிறாராம்.
தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. 26ம் தேதி ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது.

இதற்கான பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் எல்லாம் முடிந்து அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த இரண்டு வாரம் முன் 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த நிலையில் தற்போது கொடைக்கானல் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில திட்டங்களை வகுத்து வருகிறாராம்.
அமைச்சரவை மாற்றம்: அதன்படி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் சரியாக செயல்படாத அமைச்சர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் சரியாக பணியாற்றாத அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் ரிசல்ட் வந்ததும் இதற்கான முடிவு எடுக்கப்படும். கொடைக்கானலில் இருந்தபடி ஸ்டாலின் லிஸ்ட் ஒன்றை தயார் செய்து வருகிறாராம். அதில், சிறப்பாக செயலாற்றிய அமைச்சர்கள், சிறப்பாக செயலாற்றிய மாவட்ட செயலாளர்கள் ஆகியோரின் லிஸ்டை எடுத்துள்ளார்.
உதயநிதிக்கு ப்ரோமோஷன்: 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இந்த மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது போக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்த பின் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து உதயநிதி ஸ்டாலினுக்கு ப்ரோமோஷன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதோடு இல்லாமல் மோசமாக செயலாற்றிய மாவட்ட செயலாளர்கள் ஆகியோரின் லிஸ்டை எடுத்துள்ளார். இவர்களையும் ஸ்டாலின் மாற்றும் திட்டத்தில் இருக்கிறாராம்.
சோஷியல் மீடியா ஆய்வு - ஐடி விங்: இது போக திமுக ஐடி விங் பலப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. சோஷியல் மீடியாவில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கொஞ்சம் சறுக்கியது. 2026 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை மனதில் வைத்து சோஷியல் மீடியா விங்கை மொத்தமாக மாற்றும் முடிவை திமுக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எதிர் சக்திகள்: இது போக எதிர் சக்திகள் சில திமுகவிற்கு எதிராக திரள தொடங்கி உள்ளன . சோஷியல் மீடியா இன்புலேன்சர்ஸ், சினிமா விமர்சகர்கள், சில ஊடகத்தினர் திமுகவிற்கு எதிராக பணம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாக புகார்கள் சென்றுள்ளதாம். இவர்களை சமாளிக்கவும் ஆளும் திமுக தீவிரமான திட்டங்களை வகுத்து வருகிறதாம்.
அமைச்சரவை: இது போக தேசிய அளவில் இந்திய கூட்டணி வெற்றிபெற்றால் தமிழ்நாட்டில் இருந்து 3-4 அமைச்சர்கள் வர வேண்டும். பெரிய துறைகளை நாம் எடுக்க வேண்டும். யாரை அமைச்சர் ஆக்கலாம். யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் ஸ்டாலின் ஆலோசனைகளை செய்து இருக்கிறாராம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications