திடீர் என்று உடல் நலிவடைய காரணம் என்ன?.. கருணாநிதி உடலில் இருக்கும் 4 பிரச்சனைகள்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலில் நான்கு விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அவர் தற்போது மோசமான உடல்நிலையை அடைந்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்து இருக்கிறது. அவருக்கு எட்டுக்கும் அதிகமான மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
காவேரி மருத்துவமனையில் அவர் 24 மணி நேர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

சிறுநீரக நோய் தொற்று
கருணாநிதிக்கு சிறுநீரக நோய் தொற்று கடந்த 15 நாட்களாகவே இருக்கிறது. அவருக்கு டிரகியாஸ்டமி சிசிச்சை செய்த பின் காய்ச்சல் ஏற்பட்டது. அதை குணப்படுத்த கொடுக்கப்பட்ட மருந்துகள் அவர் உடலுக்கு ஒத்துழைக்காததால், மருந்துகள் நிறுத்தப்பட்டது. இதனால் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது. தற்போது இந்த சிறுநீரக நோய் தொற்று பிரச்சனை தீவிரமடைந்து உள்ளது.

கல்லீரல் நோய் தொற்று
உடலில் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்த இந்த சிறுநீரக நோய் தொற்று தற்போது அவர் ரத்த குழாய் மூலம் பரவி வருகிறது. இதனால் கல்லீரலில் நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கல்லீரல் நோய் தொற்று எளிதில் குணப்படுத்தக் கூடியது கிடையாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சுவாச பிரச்சனை
இந்த நிலையில் அவருக்கு நின்று இருந்த, சுவாச பிரச்சனை மீண்டும் அதிகரித்துள்ளது. அவர் மூச்சு விட மிகவும் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார் என்று கூறப்படுகிறது. சரியான அளவில் அவரால் ஆக்சிஜனை உள்ளிழுக்க முடியவில்லை, ரத்த குழாயில் நோய் தொற்று இருப்பதால் அவரால் சரியாக சுவாசிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

கருணாநிதியின் உறுப்புகள் செயலிழந்தது
அதன்பின் அவரது உடல்நிலை போதுமான சுவாசம் இல்லாத காரணத்தால் செயலிழந்து இருக்கிறது. இதுதான் அவரின் உடலில் ஏற்பட்டு இருக்கும் பெரிய பிரச்சனை என்று கூறப்படுகிறது. இந்த வயதில் உடலில் ஏற்பட்டு இருக்கும் உறுப்பு செயலிழப்பை சரி செய்வது என்பது இயலாத காரியம் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இதனால் அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications