ஆஹா! நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோலுக்கும், தமிழகத்துக்கும் இப்படி ஒரு வரலாறா? மிகச்சிறப்பு
சென்னை: நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவையில் புதிதாக நிறுவப்படும் செங்கோலுக்கும், தமிழகத்துக்கும் இடையேயான உள்ள 77 ஆண்டு வரலாற்று தொடர்பு பற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவாக விளக்கினார்.
டெல்லியில் சென்ட்ரல் விஸ்ட்டா திட்டத்தில் புதிதாக நாடாளுமன்றம் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28 ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு தான் திறக்க வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சிகள் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தான் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார். இந்த செங்கோல் நாடாளுமன்றத்தின் மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்பட உள்ளதாக நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
இதன் தொடர்ச்சியாக தான் அந்த செங்கோல் குறித்த பல்வேறு விஷயங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஆளுநர்கள் இல.கணேசன், ஆர்என் ரவி, தமிழிசை சவுந்தராஜன், மத்திய இணையமைச்சர் முருகன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் இருந்த நிலையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை வரும் 28 ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்த வேளையில் முக்கியமான நிகழ்வு நடைபெற உள்ளது. அதாவது கடந்த 1947ல் வெள்ளையர்கள் ஆட்சி முடிந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அப்போது ஆங்கிலேயர்களின் ஆட்சி முடிந்து நம் நாட்டின் மக்களின் கைகளுக்கு ஆளுமை கிடைத்தது. இந்த ஆளுமையை எடுத்து காட்டும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை குறிப்பால் உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு நடந்தது. இது சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் இரவு 10.30 முதல் நள்ளிரவு 12 மணிக்குள் நடந்தது. அதிகாரம் பரிமாற்றத்தை குறிக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்வு ஒவ்வொரு நாடுகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை செங்கோல் பெற்று ஆட்சி பரிமாற்றத்தை ஏற்றோம்.
இந்த செங்கோலை தர்ம டண்டம் என்கிறோம். பிரிட்டனில் இந்த நடைமுறையை தான் பின்பற்றுகிறார்கள். மன்னர் ஆட்சி முறையிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததன் நினைவாக கைமாறப்பட்ட செங்கோலில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அதாவது அதிகாரத்தையும், ஆட்சியையும் எப்படி ஒப்படைக்க வேண்டும் என ஆங்கிலேயர்கள் கேட்டனர். அதற்கு நேரு, ராஜாஜியை கலந்து ஆலோசித்தார். இந்த வேளையில் தான் செங்கோல் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்த.

செங்கோல் பரிமாறி ஆட்சி மாற்றத்தை ஏற்க வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் மூலம் செங்கோல் உருவாக்கும் பணி துவங்கியது. இந்த ஆதீனத்தின் உதவியால் சென்னையைச் சேர்ந்த வும்மிடி பங்காரு செட்டி நகைக்கடை நிறுவனம் செங்கோலை உருவாக்கி உள்ளது. இந்த செங்கோலை உருவாக்கிய வும்மிடி எத்திராஜுலு மற்றும் வும்மிடி சுதாகர் உயிரோடு இருக்கிறார்கள். இவர்கள் தயாரித்த செங்கோல் தான் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது.
இந்த செங்கோல் பற்றிய வரலாறு தெரியாமல் இருந்தது. 1978ல் காஞ்சிபுரத்தில் 100 வயது வரை வாழ்ந்த பரமாச்சாரிய ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமி எடுத்து கூறினார். இது செய்திகளில் வெளிவந்தது. அதன்பிறகு பிப்ரவரி 2021ல் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் என்பவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். விபரமாக விசாரித்தபோது அலகாபாத் பிரயாக்ராஜ் மியூசியத்தில் இருப்பது தெரியவந்தது. இதுதான் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது.
செங்கோல் என்பது நீதியும், நியாயத்தோடு கூடிய ஆட்சியை நடத்தவும், ஒருதலை பட்சமாக ஆட்சி செய்யக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் இருக்கும். இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது செங்கோலை தயாரித்தவர்கள், நாடாளுமன்ற கட்டடம் கட்டியவர்கள் என அனைவரும் கவுரவம் செய்யப்பட உள்ளனர்'' என்றார்.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications