Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழைநீரை நேரடியாக கடலில் கலக்க செம ஐடியா? வெள்ளத்தைத் தடுக்க ஒரே வழி! அரசு கவனிக்குமா?

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு: சென்னையில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க ஒரே தீர்வு என்ன என்பதைப் பற்றி முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர் ஒரு சிறப்பான திட்டத்தை முன்வைத்துள்ளார். அதன் மூலம் மட்டுமே வெள்ளச் சேதத்தைக் குறைக்க முடியும் என்றும் அவர் அடித்துச் சொல்லி இருக்கிறார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நாளை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆகவே முன்னெச்சரிக்கை காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே நேற்று காலை தொடங்கிய மழை இரவு வரை விடாமல் பெய்தது. வடசென்னை, சூளைமேடு, அசோக் நகர், கேகே நகர், வேளச்சேரி ஆகிய பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

chennai flood chennai rain

ஆனால், இன்று சென்னை மற்றும் அதனையொட்டி உள்ள புறநகர்ப் பகுதிகளில் மழை படிப்படியாகக் குறைந்து வருகிறது. தேங்கி நின்ற வெள்ளநீர் பல்வேறு பகுதிகளில் வடிந்து வருகிறது. ஆகவே மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் வெள்ளத்தை வைத்து மிகப்பெரிய அரசியல் அடிதடி சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது. ஆளும் கட்சியின் நிர்வாகம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினார் நாகரிகமற்ற முறையில் ஆளும் கட்சி தரப்பு வசை மழையைப் பொழிகிறது. அதற்குக் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை எடுத்துக் காட்டி தவறுகளை மூடி மறைக்கப் பார்க்கின்றனர். கடந்த கால ஆட்சியில் கோட்டைவிட்டுவிட்டு இப்போது எதிர்க்கட்சியாக அமர்ந்தவர்கள் ஏதோ இந்த நிர்வாக சீர்கேட்டுக்கு தாங்கள் எந்தவகையிலும் பொறுப்பே இல்லை என்பது போல் பேசுகிறார்கள்.

இப்படியே போனால் சென்னையில் மழைக்காலம் என்பது கஷ்ட காலமா என்று கேள்வி பாமர மக்கள் மனத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பாதிப்புக்கு உண்மையில் என்னதான் தீர்வு? அரசு அதிகாரிகள் எங்கே கோட்டை விடுகிறார்கள்? அதைப் பற்றி பொதுப்பணித் துறையில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.திருநாவுக்கரசு பேசுகையில், "முன்பு பெய்த மழைக்கே சென்னையைச் சுற்று உள்ள ஏரிகள் பாதி நிறைந்துவிட்டன. நேற்றும் இன்றும் பெய்த மழைக்குப் பின் கிட்டத்தட்ட நிறைந்து இருக்கும். மழைநீர் என்பது பல வழிகளில் வெளியேறும். நிலம் உறிஞ்சிக் கொள்வதால் முதலில் நீர் காலியாகும்.

அடுத்து நீர்வழி பாதைகள் மூலம் வெளியேறி ஆறு, குளம், கடலுக்குப் போகும். அதனால் நீரின் அளவு குறையும். அடுத்தபடியாக ஆவியால்தான். நேற்றும் இன்றும் பெய்து வரும் மழையால் நிலம் முழுக்க நீர் தேவையான அளவு உள்ளே இறங்கிவிட்டது. ஒருவேளை மழை இன்றும் 20 செமீட்டர் பெய்தால் நிலத்தடி நீர் 2 செமீட்டர் வரை உள்ளே இறங்கலாம். மீதம் உள்ள 18செமீ மழைநீர் அப்படியே தேங்கி நிற்கும். இதனால் பெரிய அளவு வெள்ளம் வெளியேறாமல் தேங்கி நிற்கும்.

chennai flood chennai rain

முன்பு சென்னையைச் சுற்றி உள்ள ஏரிகள் நிறைய இருந்தன. உதாரணத்திற்கு ஒரு ஏரியின் கொள்ளளவு 10 மில்லியன் கன அடி என வைத்துக் கொள்வோம். இந்த 10மில்லியன் கன அடியும் ஒரே நாளில் ஏரிக்கு வராது. ஆண்டு முழுக்க பெய்யும் மழையால் வந்து சேரும். நீரின் வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும். அந்தக் காலத்தில் விளைநிலங்கள் இருந்ததால் ஏரி நீர் விவசாயத்திற்குப் போகும். இதனால் ஏரியின் நீரின் அளவு குறையும். மீண்டும் மழை வந்தால் நிரம்பும்.

இப்போது ஏரியைச் சுற்றி விளைநிலங்கள் இல்லை. விவசாய தேவைக்காக நீரை யாரும் எடுப்பதும் இல்லை. ஆக, ஏரி நீர் கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறது. மீண்டும் மழை பெய்து 10 மில்லியன் கன அடி நீர் ஏரிக்கு வரும் போது கொள்ளளவு போதாமல் உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது. இதுவும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம். இது நிர்வாக சீர்கேடுகளால் வருவது. மாநகராட்சி ஏரிகளின் கட்டுப்பாட்டை தன்னிடம் கொடுக்கச் சொல்கிறது. டபுள்யூஆர்டி நாங்கள் பராமரித்தால்தான் சரியாக வரும் எனச் சொல்லி அதிகாரத்தை வழங்க மறுக்கிறது. இது ஓரளவுக்கு உண்மைதான். உதாரணமாகச் சொன்னால் வியாசர்பாடி ஏரி தொகுதி என ஒன்றுள்ளது. அதில் மொத்தம் 29 ஏரிகள் உள்ளன. அவை என்ன? எங்கே உள்ளன என்பது மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியுமா?

இந்த ஏரிகள் அம்பத்தூரில் தொடங்கி கொரட்டூர் வந்து அதன்பின் ரெட்டேரி வழியே மாதவரம் போகிறது. இந்த நீர் கடைசியாகப் போய்ச் சேரும் இடம் வியாசர்பாடி ஏடி. அங்கே ஒரு கல்லூரியை அரசு கட்டி இருக்கிறது. இத்தனை காலம் வந்த மழை நீர் ஏரியை மறித்துவிட்டால் எங்கே போகும்? மேலும் மழைநீரை அளவிடும் கருவிகள் நவீனமாகவில்லை. 1942லேயே வெங்கடாச்சாரி என்பவர் மழை நீரைக் கணக்கீடும் கருவிகள் தவறாக உள்ளன என்று வாதிட்டார். அதை மாற்றாமல் அப்படியே இன்றும் கணக்கிட்டு வருகிறது பொதுப் பணித்துறை. நீர் மேலாண்மையில் மாற்றங்கள் வரவேண்டும். ஆனால், இதுவரை அது நடக்கவில்லை.

பலரும் மழைநீர் வடிகால் போட்டால் போதும் வெள்ளப் பிரச்சினை சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அதுவே தவறான பார்வை. ஏரிகளின் சங்கிலி தொடர்ச்சி அறுபட்டு விட்டது. அதைச் சரி செய்யாமல் வெள்ளத்தைத் தடுக்க முடியாது. சென்னையில் பெய்யும் மழை மூன்று வழியாகத்தான் வெளியேறுகிறது. பக்கிங்காம் கால்வாய் வழியாகப் போவது, ஒன்று. ஓட்டேரி நீர்வழி பாதையாகப் போவது, இரண்டு. ரெட்ஹில்ஸ் ஏரி வழியே போவது, மூன்று. இந்த மூன்று பாதைகளிலும் அதிகபட்சமாக எவ்வளவு வெள்ளநீர் வரும் என்று ஒரு கணக்கு நம்மிடம் இருக்கிறதா? அது இருந்தால்தானே முன்னேற்பாடு செய்ய முடியும்?

மழைநீர் போகும் பக்கிங்காம் கால்வாயில் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. அதை அகற்றாமல் எப்படி வெள்ளச் சேதத்தைத் தடுப்பது? பக்கிங்காம் கால்வாயில் ஒரு அவுட்லெட் கட்டவேண்டும். அதன் வழியாக நேரடியாகக் கடலுக்கு மழைநீர் போக வழி செய்யவேண்டும். மாநகராட்சியும் டபுள்யூஆர்டி இடையே முறையான திட்டமிடல் இல்லை. இரண்டு துறை பஞ்சாயத்தால் சென்னை மக்கள் அவதிப்படுகிறார்கள்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+