ரஜினியின் புதிய படம் 'காலா கரிகாலன்'... இது 'அவரோட' புனைபெயர்!
ரஜினி அரசியல் பிரவேசம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அவரது அடுத்தப்படம் ‘காலா கரிகாலன்’ தொடர்பான செய்திகள் வெளியாகி மேலும் பரபரப்பாகியுள்ளது.
சென்னை: கபாலி படத்தை அடுத்து ரஜினிகாந்த், பா. ரஞ்சித் மீண்டும் சேர்ந்துள்ளனர். மும்பை பின்னணியில் காலா படம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை 10 மணிக்கு காலா படம் குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அரசியலோடு சேர்த்து சினிமா உலகிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்தப் படத்தின் பெயர் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் பேசும் போது, கரிகாலன் என்ற பெயர் ரஜினிகாந்த்திற்கு மிகவும் பிடித்த பெயர் என்று கூறினார். கரிகாலனின் சுருக்கம்தான் காலா என்ற உடன் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் என்றும் ரஞ்சித் குறிப்பிட்டார்.

திட்டமிட்டு உருவாக்கமா?
உண்மையில் இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என தமிழக அரசியல் சூழலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, ரஜினி தமிழர் இல்லை என்று அரசியலில் கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில் சோழ மன்னனின் பெயரை தாங்கி படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதா?

புகழ் பெற்ற தமிழன் கரிகாலன்
தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்களின் முக்கியமான மன்னன் கரிகாலன். காஞ்சி முதல் காவிரி வரை சோழர் ஆட்சி பரவ பெறும் பணியாற்றிய சோழனின் வெற்றிகளும் சாதனைகளும் அதிகம். அதே போன்று உலகமே வியக்கும் கரிகாலனின் கல்லணை இன்று வரை தமிழர்களின் பெருமிதமாக பேசப்படும் ஒன்று.

புனைப் பெயர்
தமிழ் பெருமை பேசும் அரசியல் எழுத்தாளர்கள் பலர், கரிகாலன் என்ற புனைப் பெயரில் கட்டுரைகளை எழுதுவது வழக்கம். ரஜினியின் மீது தமிழ் பெருமைகளை ஏற்றுவதற்காகத்தான் கரிகாலன் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். இதன் மூலம் அரசியலில் அவர் தமிழர் இல்லை என்ற விமர்சனத்திற்கு பதில் அளிக்க முயற்சி செய்யலாம்.

பிரபாகரன் பெயரும் இதுதான்..
தன்னை தமிழ் தொன்மத்தோடு இணைத்துக் கொள்வோர்கள் கரிகாலன், ராஜராஜசோழன் என்று பெயர் வைப்பது போன்றுதான் இதுவும். இன்னொரு விஷம் தெரியுமா உங்களுக்கு.. தமிழகத்தில் விடாமல் ஈழத்தமிழர் பிரச்சனையை பேசி வருபவர் திருமாவளவன். அவர் தொடர்ந்து ரஜினிகாந்த் குறித்து பேசி வருபவர். கரிகாலனின் மற்றொரு பெயர் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று தனி ஈழம் பெற போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இன்னொரு பெயரும் கரிகாலன்தான்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications