அந்த ஒரு வார்த்தைதான்.. திருச்செந்தூர் யானையின் கோபத்திற்கு காரணம்! மதம் பிடிக்காமலே கொன்றது எப்படி?
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் யானை பாகனை கொலை செய்ததற்கு பின் Consent என்ற மிக முக்கிய வார்த்தை காரணமாக அமைந்துள்ளதாக விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மாலை திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உதயன், அவரது உறவினர் சிசுபாலன் பலியாகி உள்ளனர். இருவரும் யானைக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆக்ரோஷத்துடன் தாக்கியுள்ளது. பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பலியாகி உள்ளனர்.
நடந்தது என்ன?: திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானையுடன் பாகனின் உறவினர் சிசுபாலன் நீண்ட நேரம் செல்பி எடுத்துவிட்டு யானையை தொட்டுள்ளார். புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் தெய்வானை யானை அவரை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது.
அவரை காப்பாற்ற வந்த யானைப் பாகன் உதயகுமாரையும் தாக்கியுள்ளது. பின் அவர் தனது பாகன் என்பதை உணர்ந்து அவரை எழுப்ப முயன்றுள்ளது. அவர் எழுந்திரிக்காததால் மீண்டும் ஆத்திரத்தில் சிசு பாலனை கடுமையாக தாக்கியுள்ளது. அப்போதுதான் இந்த மரண சம்பவம் நடந்துள்ளது.
முக்கிய வார்த்தை: திருச்செந்தூர் கோயில் யானை பாகனை கொலை செய்ததற்கு பின் Consent என்ற மிக முக்கிய வார்த்தை காரணமாக அமைந்துள்ளதாக விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது யானை பொதுவாக நெருக்கமான ஆட்களை மட்டுமே தன்னை தொட அனுமதிக்கும். அதற்கு Consent மிக முக்கியம். அதாவது ஒருவரை தொடும் முன் அவர்களிடம் அனுமதி கேட்பது.. அவர்களின் அனுமதியோடு தொடுவது முக்கியம் .
இந்த Consent இல்லாமல் யானையை பாகனின் உறவினர் தொட்டதுதான் காரணம். யானைக்கு இது போன்ற விஷயங்கள் பிடிக்காது. புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் தெய்வானை யானை அவரை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது. என்னை எப்படி தொடுகிறார் என்ற கோபத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. யார் தன்னை தெரியாதவர் தன்னை தொடுகிறார் என்ற கோபத்தில் அந்த யானை தாக்கி உள்ளது.
ஆய்வு: இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த யானையை ஆய்வு செய்தார். மாவட்ட வன அலுவலர் அளித்த பேட்டியில், பொதுவாக ஆண் யானைகளுக்குத்தான் மதம் பிடிக்கும். இது பெண் யானை, மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை. விலங்குகளின் மனநிலையை அறிய முடியாததால், அது தாக்குதல் நடத்தும் என்பதையும் யாராலும் கணிக்க முடியாது
கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது யானை அமைதியாகவே உள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகு மேலதிக விபரங்களை தெரிவிக்கிறோம் ஆய்வுக்குப் பிறகு மாவட்ட வன அலுவலர் பேட்டி அளித்துள்ளார்.
பூஜை: கோயில் யானை மிதித்து பாகன் இருவர் உயிரிழந்த நிலையில், கோயில் நடை சுமார் 45 நிமிடங்கள் சாத்தப்பட்டது. தேவையான பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிறகே கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. பரிகார அனைத்தும் செய்யப்பட்ட பிறகே கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications