For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்லகண்ணுவை திடீரென பாராட்டிய தமிழருவி மணியன்.. என்ன பிளான்??

உண்மையான காந்தியவாதி நல்லகண்ணு என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நல்லகண்ணுவை திடீரென பாராட்டிய தமிழருவி மணியன்- வீடியோ

    சென்னை: அதிசயத்திலும் அதிசயமாக, வியப்பிலும் வியப்பாக, தமிழருவி மணியனின் பேச்சும், எண்ணமும், சிந்தனையும் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணுவிடம் திரும்பி உள்ளது.

    தற்போதைய தலைவர்களில் நிஜமான காந்தியவாதி யார் என்ற கேள்விக்கு அது நல்லகண்ணுதான் வேறு யாரும் இப்போதைக்கு இல்லை என்று ஒரு தனியார் டிவியின் பேட்டியில் கூறியுள்ளார்.

    தமிழருவி மணியன் என்றாலே அதற்கு மறு உருவமாக கண்ணில் வந்து நிற்கிறார் ரஜினிகாந்த். 96'களில் அரசியல் பிரவேசம் பேச்சு எழுந்தது... மூப்பனாரும், கருணாநிதியும் ஆதரவு கரம் நீட்டியும் அதை கெட்டியாக பற்றிக் கொள்ள மறுத்தார் ரஜினி.

    [ படியிலிருந்து விழுந்த பெண்.. கடைசி நொடியில் கை கொடுத்த டீ- சர்ட்.. மும்பை ரயிலில் பரபரப்பு- வீடியோ ]

    சோவின் செயல்பாடு

    சோவின் செயல்பாடு

    அதோடு மட்டுமல்லாமல் "தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் இருக்கும் வரை நான் அரசியலுக்கு வரவே மாட்டேன், இதுதான் நான் அவருக்கு செய்யும் மரியாதை" என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கூட கொடுத்தார். ஆனால் இந்த விஷயம் தெரியாத மறைந்த சோ ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்து ஜெயலலிதாவுக்கு மறைமுக உதவிகளை செய்தார்.

    ரஜினியின் ஆலோசகர்

    ரஜினியின் ஆலோசகர்

    ஒருகட்டத்தில் ரஜினியை சோவுக்கு பிடித்துபோய்விட ஜெயலலிதாவுக்கு மட்டுமே அரசியல் ஆலோசகராக இருந்த சோ, ரஜினிக்கும் ஆலோசகராக மாறினார். நாளடைவில் சூழ்நிலை, உடல்நிலை, காரணங்களால் சோ ஒதுங்க... ரஜினிக்கு ஆலோசனை தர யாருமில்லாமல் தனித்து விடப்பட... அந்த இடத்தை லபக்கென்று பிடித்து கொண்டு விட்டார் தமிழருவி மணியன்.

    ரஜினிதான் காந்தியவாதி

    ரஜினிதான் காந்தியவாதி

    காந்தியவாதியான தமிழருவி மணியனின் ஒவ்வொரு பேச்சும், நோக்கமும் ரஜினியையே சுற்று சுற்றி வருகிறது. ஒருமுறை தமிழருவி மணியன்பேசும்போது, "இந்த மண் முழுவதையும் அன்பால் ஆர தழுவி அரவணைத்து கொள்ள வேண்டும் எனத் துடித்து தவமிருக்கும் மனிதன்தான் ரஜினிகாந்த். காந்தியவாதி ரஜினி உண்மையாக இருப்பதும், அன்பாக இருப்பதும்தான் காந்தியம் என்றால், ரஜினிகாந்த்தான் உண்மையான காந்தியவாதி என்றார்.

    அதிருப்தியா?

    அதிருப்தியா?

    ரஜினியும் தமிழருவி மணியன் பேச்சை தட்டாமலே வந்துள்ளார். இப்படி ரஜினியை மையமாக வைத்தே செயல்பட்டு வரும் தமிழருவி மணியன்தான் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் பக்கம் தன் பார்வையை திருப்பியுள்ளார். இதற்கு என்ன காரணம்? திராவிட கட்சிகளின் மேல் அதிருப்தியின் வெளிப்பாடா இது? அல்லது இந்துத்துவா கட்சிகளுக்கு ஆதரவான செயல்பாடு என்ற முத்திரை கறையை போக்கும் செயலா? என தெரியவில்லை.

    கொள்கை பிடிப்பு

    கொள்கை பிடிப்பு

    நல்லகண்ணு மிகச்சிறந்த மனிதர்.. எளிமைவிரும்பி... இறுதிவரை தன் இயக்கத்தின் கொள்கைப் பிடிப்புக்காகவே வாழ்ந்து வருபவர்... இதுவரை எந்த எதிரிகளையும் சம்பாதிக்காத மென்மை போக்கை உடையவர்.. இதுவரை எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாதவர்... நல்லகண்ணுவின் நிழல் கூட ஒழுக்கமானதே!! இது நாடறிந்த உண்மை!!

    தலித் மக்கள் ஆதரவு

    தலித் மக்கள் ஆதரவு

    நல்லகண்ணு நிஜமான காந்தியவாதி என்பதை யாராலும் மறுக்க முடியாவிட்டாலும், அதை ரஜினியை இயக்கும் தமிழருவி மணியன் சொன்னதுதான் பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது. இப்படிப்பட்ட ஒரு வாழும் மகாத்மாவின் ஆதரவும், பிம்பமும் ரஜினிக்கு தேவைப்படுகிறதா? கபாலி, காலா என்று தலித் மக்களை தன்பால் இழுத்து வரும்நிலையில், தற்போது கம்யூனிசவாதிகளின் ஆதரவும் தேவைப்படுகிறதா? என்று தெரியவில்லை.

    எதிர்மறை விமர்சனம்

    எதிர்மறை விமர்சனம்

    ரஜினி சத்தமில்லாமலும், பொறுமையாகவும், தீர்க்கமாகவும் யோசித்து தன் அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் இதுவரை ரஜினி குறித்து எந்தவித எதிர்மறை விமர்சனத்தையும் முன்வைத்ததில்லை.

    நன்மதிப்பு முயற்சியா?

    நன்மதிப்பு முயற்சியா?

    ஆனால் முற்போக்கு இயக்கங்கள் என்றுமே ரஜினிக்கு எதிர்ப்புதான். இந்நிலையில் தமிழருவி மணியனின் இந்த அணுகுமுறையை எப்படி எடுத்து கொள்வார்களோ தெரியாது. நல்லக்கண்ணு என்ற முகத்தை முன்னிறுத்தி தமிழக மக்களிடம் நன்பதிப்பை பெறும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறதா என்று தமிழருவி மணியனுக்கு மட்டும்தான் தெரியும்!

    English summary
    What is the reason for Thamizharuvi Maniyan to praise CPI NallaKannu?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X