அட! விஜயதரணி பாஜக போனதற்குக் காரணம் இதுதானா? கருத்து பேசிய விளவங்கோடு மக்கள்!
விளவங்கோடு: விஜயதரணி பாஜகவுக்கு மாறியுள்ளதை அவரது தொகுதி மக்கள் எப்படி எடுத்துக் கொண்டுள்ளார்கள்? அவர்களின் மனநிலை என்ன?
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளார். அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. அப்படி இருக்கும்போது அதனைத் தூக்கி எறிந்துவிட்டு கட்சி மாறி இருக்கிறார்.

அவரது கொள்ளுத்தாத்தா கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அந்த செல்வாக்கை வைத்து அவருக்கு மூன்று முறை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ சீட்டு வழங்கி இருந்தது. அவர் போட்டியிட்டு வென்ற தொகுதி காலங்காலமாகக் காங்கிரஸ் மண். 1957இல் வில்லியம் தொடங்கி வைத்த காங்கிரஸ் பாரம்பரியம் விஜயதரணி வரை அது நீடித்து வந்துள்ளது.

இந்தத் தொகுதியில் அதிகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன.
காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி சார்பில் நின்றதால்தான் விஜயதரணி மிக எளிமையாக மூன்று முறை இந்தத் தொகுதியைக் கைப்பற்றினார். இல்லை என்றால் இந்த வெற்றி அவருக்குக் கிடைத்திருக்காது.

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வளர்ந்து வருவது உண்மை. ஆனால், விளவங்கோட்டில் பாஜகவுக்குப் பெரிய பலம் இல்லை. இந்தத் தொகுதிக்குள் இன்னும் பாஜக நுழையவே இல்லை.
விஜயதரணியின் இந்த முடிவு திடீரென்று வெளியான விசயம் இல்லை. அவர் பாஜகவுக்குச் செல்லப் போகிறார் என்பது, குஷ்பு பாஜகவில் இணைந்த போதே வெளியான செய்தி. அந்தச் செய்தியை அவர் வதந்தி என மறுத்து வந்தார். கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதான் ஆகவேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு.
அது இவரது விசயத்தில் இப்போது உண்மையாகி உள்ளது. விஜயதரணி கட்சி மாறியது குறித்து பத்திரிகையாளர் என்.சுவாமிநாதன், விளவங்கோடு தொகுதி மக்களின் மனநிலை குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பெரும்பாலான மக்கள் அவர் கட்சி மாறியதை அதிர்ச்சியாக எடுத்துக் கொள்ளவே இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

விளவங்கோடு தொகுதிக்குள் வசிக்கும் மூத்த குடிமகனான ஜவஹர்லால் நேரு என்பவர் விஜயதரணி கட்சி மாறியதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். அவரது வெற்றிக்குக் காங்கிரஸ் - திமுக கூட்டணிதான் காரணம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவரது குடும்பமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தது. ஆகவே அப்படிச் சொல்கிறார் என எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தத் தொகுதியில் பாரம்பரியமாக இவரைப் போன்று பல குடும்பங்கள் காங்கிரசில் உள்ளனர்.
அடுத்துப் பேசி உள்ள ஆட்டோக்காரர் ஒருவர் திமுக- காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் கூட்டணியில் நின்றதால் அவர் வெற்றி பெற்றார் என்கிறார். ஒரு குறிப்பிட்ட மதத்தை ஆதரிக்கும் கட்சியில் அவர் போய்ச் சேர்ந்துள்ளார். அதை அவரது விருப்பமாகவும் பார்க்கலாம். ஓட்டுப் போட்ட விளவங்கோடு மக்களை ஏமாற்றி இருப்பதாகவும் பார்க்கலாம் என்று கமல் போல் மத்தியமாகப் பேசியிருக்கிறார்.

ஆனால், இவர் பாஜக கூட்டணியில் விஜயதரணி வெற்றிபெறுவதற்காக வாய்ப்பு இல்லை என்கிறார். அவர் தொகுதிக்காகச் சாலைகளைப் போட்டுக் கொடுத்துள்ளார். நிழல் குடை அமைத்துக் கொடுத்துள்ளார். இது வழக்கமாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் செய்வதுதான்.
ஆனால், அவர் மீது உள்ள குற்றச் சாட்டு என்னவென்றால், அவர் தொகுதி பக்கமே வருவதில்லை என்பதே. அது உண்மை என்கிறார்

இவரைத் தொடர்ந்து பேசி உள்ள ரவிக்குமார் என்பவர் 2001இல் இருந்து இந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டுகிறார். அவர் பாஜகவில் இணைந்ததால் அல்ல, அவர் இணையாமல் இருந்தால் கூட பாஜகவுக்குத்தான் ஓட்டுப் போடுவோம்.
அவர் இப்போதுதான் கட்சியில் சேர்ந்துள்ளார். அவரது செயல்பாட்டை வைத்துத் தான் தொகுதியில் கட்சி வளருமா வளராதா என்று பார்க்க முடியும். அண்ணா மலை போல அவர் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால், இந்தத் தொகுதியில் அவர் வெற்றி பெற முடியும் என்கிறார்.

மார்த்தாண்டம் பகுதி மக்கள் சில பாஜகவை ஆதரித்து கருத்துச் சொல்லி உள்ளனர். இதே பகுதியைச் சேர்ந்த டால்ஸ்டாய் என்பவர், 'விஜயதரணி எம்.எல்.ஏ பதவியை விட்டு பாஜகவுக்குப் போய் இருக்கிறார்.
அவர் இங்கே வெற்றி பெறவில்லை என்றாலும் வேறு மாநிலத்தில் ஆளுநராகும் வாய்ப்பு கூட கிடைக்கும். இனிமேல் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராது. அதை மனதில் வைத்து விஜயதரணி பாஜக பக்கம் போய் உள்ளார்.

ஆனால், பாஜக சார்பாக இந்தத் தொகுதியில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெற முடியாது. ஏனென்றால் கிறிஸ்துவர்கள் முஸ்லிம் மக்களின் ஓட்டு இங்கே அதிகம். அவர்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போடமாட்டார்கள். அவர்களின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெறுவது கடினம்' என்று கூறியுள்ளார்
இறுதியாகப் பேசி உள்ள ஒருவர், 'இத்தனை நாள் பாஜகவைப் பற்றி குற்றம் கூறிவந்த விஜயதரணி, இப்போது பாஜகவில் இணைந்துள்ளார். அப்படி என்றால் அதற்குள் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். இப்படி அவர் கட்சி மாறிக் கொண்டிருந்தால் அவருக்கு ஆதரவு தொகுதிக்குள் கிடைக்காது' என்று அடித்துச் சொல்லி இருக்கிறார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications