கல்யாண பத்திரிக்கையை காது குத்துக்கு கொடுத்த தபால்துறை... நெல்லை வியாபாரி அதிர்ச்சி
நெல்லை: நண்பரின் திருமண பத்திரிக்கையை 2 மாதங்கள் கழித்து டெலிவரி செய்துள்ளது தபால்துறை. கல்யாணத்துக்கு பத்திரிக்கை அனுப்பியதை காது குத்துக்கு கொடுத்த சம்பவம் நெல்லை பகுதியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் பண்டாரம் மகன் வேல்முருகன். அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் வினோத் ராம் பிரசாத். திருவாரூர் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறார்.
கடந்த ஜனவரி 26ஆம்தேதி தனது திருமணத்தை முன்னிட்டு வினோத் கள்ளக்குறிச்சியில் இருந்து பாளையங்கோட்டையில் உள்ள நண்பர் வேல் முருகனுக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். ஆனால் தபால் வநது சேரவில்லை.
இரண்டு மாதங்கள் கழித்து மாலையில் வேல்முருகனுக்கு திருணம அழைப்பிதழ் கிடைத்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அனுப்பிய அழைப்பிதழ் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்ததால் வேல்முருகன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சியில் உள்ள எனது நண்பருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம நடந்துள்ளது. ஆனால் திருமண அழைப்பிதழோ இப்போதுதான் கிடைத்துள்ளது. அநத திருமணத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை.
இதுபோல் இன்டர்வியூ கார்டுகள், மாணவர்களுக்கான அட்மிஷன் கார்டுகள் ஆகியவை தாமதமாக கிடைத்ததால் அவர்கள் என்ன செய்வார்கள், இதனால் அவர்களது வாழ்க்கை பாதிக்கப்படும். இதுகுறித்து பாளை தலைமை தபால் நிலையத்தில் அதிகாரிகளை பார்த்து முறையிட உள்ளேன் என்று அவர் காட்டமாக தெரிவித்தார். தபால் துறையின் இந்த மோசமான செயல்பாட்டால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications