இந்த பதவியும் இல்லையா? மீண்டும் வாய்ப்பு வழங்காத ஸ்டாலின்.. கனிமொழி ஏமாற்றம்!
திமுகவில் முக்கியமான பதவிகள் எல்லாம் மூத்த உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டதால், கனிமொழிக்கு எந்த பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: திமுகவில் முக்கியமான பதவிகள் எல்லாம் மூத்த உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டதால், கனிமொழிக்கு எந்த பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கனவே பொருளாளர் பதவி தனக்கு கிடைக்காததை எண்ணி கனிமொழி வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதம் ஆகப்போகிறது.
அதேபோல் பொருளாளராக துரைமுருகன் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் கட்சியில் அடுத்தடுத்த சில மாற்றங்கள் நடக்க உள்ளது என்று அறிவாலயம் தரப்பு தெரிவிக்கிறது.

பொருளாளர் பதவி கிடைக்கவில்லை
திமுகவில் முதலில் பொருளாளர் பதவியைதான் கனிமொழி எதிர்பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் கட்சியில் மூத்த உறுப்பினர் துரைமுருகன்தான், அவருக்குத்தான் கண்டிப்பாக பொருளாளர் பதவி என்று ஏற்கனவே கனிமொழியிடம் ஸ்டாலின் பேசிவிட்டதாக அப்போதே தகவல் வெளியானது. இதற்கு ''அதெல்லாம் பிரச்சனை இல்லை'' என்று கனிமொழியும் சமாதானம் ஆகிவிட்டதாக கூறப்பட்டது.
[எதிர்பார்த்தபடியே.. திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்!]

கனிமொழிக்கு என்ன பதவி
அதனால் கனிமொழிக்கு துரைமுருகன் வகித்த பதவி கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவியை வகித்து வந்தார் துரைமுருகன். இந்த பதவி காலியாக இருந்ததால், அது கனிமொழிக்கு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. இதற்கு அறிவிப்பு வரும் என்று கனிமொழியின் ஆதரவாளர்கள் காத்திருந்தனர்.

ஏமாற்றம்
இந்த நிலையில், அந்த பதவியும் தற்போது கனிமொழிக்கு வழங்கப்படவில்லை. திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவி தற்போது டி.ஆர்.பாலுவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த உறுப்பினர் என்பதால் இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளது.

கடைசியில் துணை பொதுச்செயலாளர்
இப்படி எந்த பதவியுமே அளிக்கப்படாததால் கனிமொழி வருத்தத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆனால் கனிமொழிக்கு பெண்கள் மத்தியிலும், தென்தமிழகத்திலும் பெரிய அளவில் செல்வாக்கு உள்ளதால், அவருக்கு பதவி கொடுக்காமல் இருக்க முடியாது. திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியை கனிமொழிக்கு வழங்க வாய்ப்புள்ளது என்று ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications