எதிர்பார்த்தபடியே.. திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்!
திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டார்.
சென்னை : திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டார்.
கருணாநிதி மறைவை அடுத்து திமுகவில் மிகப்பெரிய மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. திமுக செயல்தலைவராக இருந்த ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்றார். அவருடன் கழகத்தின் முதன்மை செயலாளராக இருந்த துரைமுருகன் பொருளாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முதன்மை செயலாளர் யார்?
இதையடுத்து முதன்மை செயலாளர் பதவியானது காலியாகவே இருந்து வந்தது. அந்த முதன்மை செயலாளர் பொறுப்பில் நீடிப்பது யார்? முதன்மை செயலாளர் பொறுப்பையும் சேர்த்து துரைமுருகனே கவனிக்கிறாரா? அல்லது பொருளாளர் பொறுப்பை மட்டும் கவனிக்கிறாரா? என்பது தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்தது. மேலும், அப்படி முதன்மை செயலாளர் பொறுப்பில் வேறு ஒருவர் அமர வைக்கப்பட்டால் அது யாராக இருக்கும்? என்ற பேச்சும் திமுகவில் நிலவி வந்தது.
[Read This: சட்டென்று மாறுகிறதா தமிழக அரசியல் வானிலை? ]

கழக நிர்வாகிகள் கருத்து
முதன்மை செயலாளர் பதவி என்பது பொருளாளருக்கு மேலான பதவி. அதனால் நிச்சயம் துரைமுருகன் அளவுக்கு ஈடாகவோ அல்லது மேலும் அனுபவம் வாய்ந்தவராகவோ இருக்கும் ஒருவருக்குத்தான் இந்த பதவியை அளிக்க முடியும் என்றும் கழக நிர்வாகிகள் கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

ஸ்டாலின் முற்றுப்புள்ளி
அதற்காக டி.ஆர்.பாலு, எ.வ.வேலு ஆகியோரது பெயர்களும் முதன்மை செயலாளர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதில் எ.வ.வேலுவுக்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில், இதுபோன்ற அனுமானத்திற்கெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

டி.ஆர்.பாலு நியமனம்
அதன்படி டி.ஆர்.பாலுவை முதன்மை நிலைய செயலாளராக நியமித்துள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அரசியல் அனுபவம் நிறைந்த டி.ஆர்.பாலுவுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications