7 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை எந்த நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தது.. கருணாநிதி
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை இப்போது ஆட்சேபிக்கும் சென்னை காவல்துறை, 7 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிலையை வைத்தபோது எந்த நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.
சிவாஜி கணேசன் சிலை விவகாரம் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில் சிலை வைத்தபோது காவல்துறையினர் எங்கே இருந்தார்கள் என்று கேட்டுள்ளார்.

எதிர்ப்பு தெரிவித்தால் என்ன நடக்குமோ...?
கேள்வி: நடிகர் திலகத்தின் சிலையை அகற்ற வேண்டு மென்று அ.தி.மு.க. அரசின் காவல் துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு, திரை உலகைச் சேர்ந்தவர்களோ, நடிகர் சங்கத்தினரோ இதுவரை எதிர்ப்பே தெரிவிக்கவில்லையே?
பதில்: எதிர்ப்புத் தெரிவிப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருந்திருக்காது! ஆனால் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டு, அதற்குப்பிறகு (?) என்ன நடக்கும் என்பதைப் பற்றி அவர்கள் எல்லாம் யோசித்திருப்பார்கள்! ஆனால், இப்போது அந்த இடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் காவல் துறை, 2006ஆம் ஆண்டு, அதாவது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சிலை வைக்கப்பட்ட போது எந்த நாட்டிலே வேலை பார்த்துக் கொண்டிருந்தது என்ற கேள்விக்கு மட்டும் பதில் தேவை!

முதல்வர் பிரசாரம் செய்கிறாரே?
கேள்வி: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலுக்கு முதல்வரும் பிரச்சாரத்திற்காகச் சென்றிருக்கிறாரே?
பதில்: முதல்வர் உட்பட அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஒரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்காக "பிரச்சாரத்திற்காக" எப்போதாவது சென்றிருக்கிறார்களா?

பேரறிவாளனுக்கு நியாயம்
கேள்வி: பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டுமென்றும், அதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வர வேண்டுமென்றும் கூறியிருந்தீர்கள்; அதை எப்படி நடைமுறைப் படுத்த முடியும்?
பதில்: புலன் விசாரணை அதிகாரி தற்போது வெளியிட்டுள்ள தகவலுக்கு முன்பாகவே, கடந்த சில ஆண்டுகளாகவே, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டுமென்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அறிக்கைகளும் விடுத்துள்ளேன்.

மூவரையும் விடுவிக்க வேண்டும்
29-8-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் 13-4-2013 அன்று நான் விடுத்த அறிக்கையிலும் இந்த வேண்டுகோளைத்தான் வலியுறுத்தியிருந்தேன். இதற்கிடையேதான் சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ள கருத்துகள் மிகுந்த அதிர்ச்சியை நமக்குத் தந்தன.

அதிர்ச்சி தந்த அதிகாரியின் கருத்து
அந்தக் காவல் துறை அதிகாரி தற்போது கூறும்போது, "சிவராசனுக்கு, இரண்டு வோல்ட் பவர் பேட்டரிகளை பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தார். அதுதான், ராஜீவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுக்குப் பயன்படும் என தனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் என்னிடம் சொல்லியிருந்தார். இதை நான் வாக்குமூலம் எழுதும்போது, இந்தப் பேட்டரி மூலம், இயக்கப்பட்ட வெடிகுண்டைப் பயன்படுத்தி ராஜீவ் காந்தியைக் கொலை செய்தார்கள் எனப் பொதுவாக பதிவு செய்திருந்தேன். "எனக்குத் தெரியாது" என்று பேரறிவாளன் சொன்னதை விட்டுவிட்டு, நான் வாக்குமூலத்தை எழுதிவிட்டேன்.

மாற்றி எழுதி விட்டேன்
வழக்கு விசாரணையில், "இதுபோல் வாக்குமூலம் தரவில்லை" என்று பேரறிவாளன் மறுத்தார். குறுக்கு விசாரணையில், தடா நீதிமன்றத்தில் என்னைக் குறுக்கு விசாரணை செய்த வழக்கறிஞர் துரைசாமி, சாட்சியங்களை வேண்டுமென்றே நான் மாற்றி எழுதி விட்டதாகக் குற்றம் சாட்டினார், அவற்றை நான் மறுத்துவிட்டேன்"" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாவ மன்னிப்பு
தான் செய்த தவறுக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் காவல் துறை அதிகாரி "பாவ மன்னிப்பு" கோரியிருக்கிறார். ஆனால் அந்த இளைஞனின் 22 ஆண்டுக் கால வாழ்க்கையை யாரால் திருப்பிக் கொடுக்க முடியும்? ஒருவேளை இந்த இடைவெளியில் அவர் தூக்குத் தண்டனைக்கு ஆளாகியிருந்தால், அந்த இளைஞனைப் பெற்ற தாய்க்கு நாம் எப்படி ஆறுதல் கூறியிருக்க முடியும்?

விரைவில் விடுதலை செய்ய வேண்டும்
காவல் துறை அதிகாரியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கட்சிகள் பேரறிவாளனை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றன. பேரறிவாளனைப் பெற்ற தாயாரும் அந்த வேண்டுகோளை கண்ணீரோடு வைத்திருக்கிறார். இந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, இனியாவது அந்த வாலிபனுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் விடுதலை தரப்பட வேண்டும்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications