இன்று காலை 7.10 முதல் 8.05 வரை கோபாலபுரத்தில் நடந்தது என்ன?... பரபர தகவல்கள்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் மிகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் இறுதியில் கருணாநிதியின் அறையிலிருந்து அழகிரி மிகக் கோபத்துடன் வெளியேறியதாகவும், அதன் பின்னரே அன்பழகனை அழைத்து உடனடியாக அழகிரியை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யும் உத்தரவை வெளியிட கருணாநிதி உத்தரவிட்டதாவும் தகவல்கள் கூறுகின்றன.
அந்த வாக்குவாதத்தின்போது என்ன பரிமாறிக் கொள்ளப்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் கருணாநிதி அறையிலிருந்து அழகிரி மிகுந்த கோபத்துடன் வெளியேறியதாகவும், கீழே காத்திருந்த தனது மகள் கயல்விழி மற்றும் மருமகனை தன்னுடன் வருமாறு வேகமாக கூறியபடி அழகிரி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இன்று காலை 7 மணியளவில் கோபாலபுரம் வீட்டுக்கு வந்துள்ளார் அழகிரி. நேராக மாடியில் இருந்த கருணாநிதி அறைக்கு விரைந்த அவர், கருணாநிதியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டாரம். சுமார் 7.10 மணி முதல் 8.05 வரை இந்த வாதம் நீடித்ததாக தெரிகிறது. அப்போது கருணாநிதியுடன் அவரது உதவியாளர் மட்டுமே இருந்துள்ளார். வேறு யாரும் இல்லை.

அதன் பின்னர் அழகிரி கோபத்துடன் கீழே வந்துள்ளார். தனது மகள், மருமகனை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேறியுள்ளார்.
அதன் பின்னர் கருணாநிதி, அன்பழகனை அழைத்துள்ளார். அவருடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளா்ர். உடனடியாக அழகிரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அழகிரி நீக்கச் செய்தியை அன்பழகன் வெளியிட்டார்.
கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி, அழகிரி இடையிலான கடும் வாதத்தின்போது என்ன பரிமாறிக் கொள்ளப்பட்டது என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications