For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் வெற்றி என்று குதூகலித்த தமிழிசை.. மாணவனின் தந்தை மரணத்துக்கு என்ன பதில் சொல்ல போகிறார்?

நீட் வெற்றி என்று குதூகலித்துள்ள தமிழிசை, எர்ணாகுளத்தில் மாணவனின் தந்தை மரணத்துக்கு என்ன பதில் சொல்ல போகிறார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வு பற்றி தமிழிசை செளந்தர்ராஜன்-வீடியோ

    சென்னை: நீட் தேர்வு முறை வெற்றி என்று குதூகலமாக கூறிய தமிழிசை தற்போது செயற்கையாக நடந்த மாணவனின் தந்தையின் மரணத்துக்கு என்ன பதில் சொல்ல போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மருத்துவ படிப்புகளுக்கு சேரும் வகையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு 2-ஆவது முறையாக தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

    நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு தமிழகத்திலும், 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பிற மாநிலங்களிலும் தேர்வு மைய்ம ஒதுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் இன்னல்களுக்கு மத்தியில் இன்று தேர்வு எழுத சென்றுள்ளனர்.

    மொழி பிரச்சினை

    மொழி பிரச்சினை

    பெரும்பாலான தமிழக மாணவர்களின் பெற்றோர் வெளிமாநிலங்களில் மொழி தெரியாமல், இருக்க இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் கூட செய்யப்படாமல் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.

    தந்தை மரணம்

    தந்தை மரணம்

    இந்நிலையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தனது மகனை அழைத்து கொண்டு எர்ணாகுளத்துக்கு சென்றார். அங்கு மகனை தேர்வு மையத்துக்கு அனுப்பிவிட்டு விடுதிக்கு வந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார்.

    குதூகலமான டுவீட்

    குதூகலமான டுவீட்

    நீட் தேர்வு எழுதும் முறைக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக டுவிட்டரில் தமிழிசை குதூகலமாக தெரிவித்தார். மேலும் மெரிட்டில் தேர்வு எழுதி லட்சங்கள், கோடி என செலவு செய்யாமல் மருத்துவராகுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் நீட் தேர்வுக்கு வெளிமாநிலங்கள் மையங்கள் ஒதுக்கியது குறித்து நேற்று செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் தமிழிசை வாக்குவாதம் செய்தார்.

    செயற்கையான மரணம்

    செயற்கையான மரணம்

    தற்போது மன அழுத்தம், அலைச்சல் காரணமாக எர்ணாகுளத்தில் மாணவனின் தந்தை மரணமடைந்துள்ளார். இதற்கு யார் பொறுப்பேற்பது. இதுபோன்ற கொடுமைகளை அரங்கேற்றி செயற்கையான முறையில் மரணத்தை ஏற்படுத்தியவர்கள் யார்.. இப்போதும் நீட் வெற்றி என்று முழக்கமிடப் போகிறாரா தமிழிசை.. நீட் தேர்வுக்காக வாக்காலத்து வாங்கிய ஒவ்வொருவரும் வெட்கித் தலை குணிய வேண்டாமா..

    நீட் தேர்வின் அத்தனை அக்கிரமங்களுக்கும் சப்பைக் கட்டு கட்டும் தமிழிசை போன்றவர்கள் இந்த துயரத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

    English summary
    What will be the reply of Tamilisai Soundararajan for the Neet Student's father dies? In the morning she wishes all the students those who write Neet Exam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X