கனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள்.. நிருபர்களிடம் பதறிய அமைச்சர் ஜெயக்குமார்
எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்ணை தவறாக பேசக்கூடாது என எச் ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்ணை தவறாக பேசக்கூடாது என எச் ராஜா டிவிட் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, அவரது துணைவியார் ராஜாத்தியம்மாள் மற்றும் அவர்களின் மகளும் திமுக ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் எச் ராஜா டிவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
எச் ராஜாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எச் ராஜாவை கண்டித்து திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெயக்குமார் பதில்
எச் ராஜாவின் இந்த டிவிட் மன வேதனையளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் எச் ராஜா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

எச் ராஜா - திமுக பிரச்சனை
அப்போது எச்.ராஜா கருத்து பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். எச்.ராஜா-திமுக நடுவேயான பிரச்சினை இது என்றும் ஜெயக்குமார் கூறினார்.

எந்தக் கட்சியாக இருந்தாலும்
எந்த பெண்ணையும் தப்பாக பேச கூடாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்ணை தப்பாக பேச கூடாது என்றும அவர் அறிவுறுத்தினார்.

கனிமொழிக்கு சப்போர்ட்டில்லை
நான் கனிமொழிக்கு சப்போர்ட் செய்வதாக செய்தி போட்டுவிடாதீர்கள் என்ற ஜெயக்குமார், பெண்மைக்கு இழிவு ஏற்படும் வகையில் எந்த சொல்லும், யாரும் கூறக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

வழக்கு போடலாம்
பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் கிரிமினல் வழக்கு, அவதூறு வழக்குகளையும் போட முடியும் என்றும் அவர் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications