விதம் விதமா சோப்பு சீப்பு கண்ணாடி.. இந்த "வாட்ஸ் ஆப்" சேலை ஜொலிக்குதே முன்னாடி!
சென்னை: காலத்திற்கு தக்கபடி பேஷனும் மாறி வருவது வழக்கம் தான். அதிலும் பெண்களின் உடை மற்றும் ஆபரணங்கள் விசயத்தில் பேஷன் மாறிக் கொண்டிருக்கும். அதுவாக மாறா விட்டாலும் கூட பெண்களே புது பேஷனை களம் இறக்கி களேபரப்படுத்தி விடுவார்கள்.
சேரனின் ஆட்டோகிராப் படம் வெளியான புதிதில் அதில் கோபிகா கட்டியிருப்பது போன்ற உயிரெழுத்துக்கள் டிசைன் போட்ட சேலைகள் பிரபலமாக விற்றது நினைவிருக்கலாம்.

அதுபோல், தற்போது புதிய பேஷன் சேலை என்று வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் ஒரு படம் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் பெண்மணி ஒருவர் சேலை கட்டியபடி செல்போனில் படு ஸ்டைலாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அவரது சேலையைப் பார்த்தால் செம வித்தியாசமாக இருக்கிறது. அதாவது வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர், யாஹு மெயில் ஜி மெயில் என இணையதள கலக்கல்களின் சிம்பல்கள் வரையப் பட்டுள்ளன.
ஏற்கனவே, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் சிம்பல் வரையப்பட்ட கைப்பைகள். செருப்பு மற்றும் ஆபரணங்கள் சந்தையில் விற்கப் படுகின்றன. இந்நிலையில், புது வரவாக இந்த சேலையும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
எந்நேரமும் பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளப் பக்கத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த சேலை பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நியூசை படிச்சுட்டு எங்கங்க கிளம்பிட்டீங்க....? ஓ, அந்த சேலையை வாங்குறதுக்கா.... !
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications