பீஸ் பீஸா போச்சே.. "கலங்கும்" அந்த கண்கள்.. நொந்து போன தலைவரை, தாங்கி பிடித்த சீனியர்.. பலே எடப்பாடி
சென்னை: அதிமுகவை தன்வசம் கொண்டுவந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதையடுத்து தேர்தல் பணிகள், கூட்டணி விவகாரங்கள், கட்சியை பலப்படுத்துவது என அடுத்தடுத்த மூவ்களை எடப்பாடி எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? என்ற கேள்வி அரசியல் களத்தில் வட்டமடிக்கிறது.
தென்மண்டலங்களில் செல்வாக்கு நிறைந்த ஓபிஎஸ்ஸூக்கு, கொங்கு மண்டலத்தில் பெருவாரியான ஆதரவு இல்லை தெரிகிறது.. அதுபோலவே, கொங்கு மண்டலத்தில் இருப்பதை போலவே, எடப்பாடி பழனிசாமிக்கு தென்மண்டலங்களில், பெரும்பான்மையான அளவுக்கு ஆதரவு இல்லை என்றே தெரிகிறது.
வாக்குக்கு குறி: இதில், ஏற்கனவே வன்னியர் இடஒதுக்கீட்டு விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மீது, முக்குலத்தோர் சமூகத்தினர் கோபமாக உள்ள நிலையில், எடப்பாடி மீதான அதிருப்திகள் அதிகரித்துள்ளது.. இவைகளை போக்கவே, தென்மண்டலத்தில் எடப்பாடியின் கவனம் தற்போது திரும்பி வருகிறது.

இதற்காகவே ஆர்பி உதயகுமாருக்கு செல்லூர் முக்கிய பதவிகளை ஒதுக்கி வருகிறார்.. ஆனாலும், இந்த ஒருவருடமாகவே இதற்கான பலன் எடப்பாடிக்கு கிடைத்திருக்கிறதா தெரியவில்லை.. அதேபோல, ஓபிஎஸ் தரப்பில் இருந்து, இதுவரையும் ஒருத்தரையும் தன் பக்கம் இழுக்க முடியவில்லை.
மேலிட பாஜக: இதனிடையே தன்னுடைய பலத்தை, மேலிட பாஜகவுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, திருச்சியில் மாநாட்டை கூட்டினார் ஓபிஎஸ்.. இந்த மாநாடு ஓரளவு வெற்றியை ஓபிஎஸ்ஸூக்கு பெற்று தந்ததாகவே பார்க்கப்பட்டது.. அத்துடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்த மாநாடுகளை நடத்தவும், இந்த திருச்சி மாநாடு, ஓபிஎஸ்ஸூக்கு திருப்பத்தை தந்துள்ளது.. அந்தவகையில், கொங்குவில் அடுத்த மாநாட்டினை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அமமுக பொதுச்செயலாளர் தினகரனின் ஆதரவை பெற்று, இந்த கொங்கு மாநாட்டினை ஓபிஎஸ் நடத்தவும் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டன.. ஆனால், இப்போது எல்லா பிளான்களுமே நொறுங்கிவிட்டன.. கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்துவது குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வரும்நிலையில், அதிமுகவை கைப்பற்றுவதில் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டதால் ஓபிஎஸ்சிடம் முன்பு மாதிரி உற்சாகம் இல்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
நம்பிக்கை வார்த்தைகள்: தன்னை சந்திக்க வருபவர்களிடம் கூட நம்பிக்கையுடன் பேச மறுத்து, "கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தி மட்டும் என்ன ஆகப்போகிறது? " என்று விரக்தியான வார்த்தைகள் வெளிவருகிறதாம். இந்த நிலையில், "தேர்தல் ஆணையம் என்ன மாதிரி அங்கீகாரம் வேண்டுமானாலும் எடப்பாடிக்கு தரட்டும். பிரச்சனை இல்லை. ஆனால், சிவில் கோர்ட்டில் போடப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டதுதான். கவலையை விடுங்கள் " என்று அவ்வப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் தான் ஓபிஎஸ்சுக்கு தெம்பு கொடுத்து வருகிறாராம்.

கைவிட்டுட்டாங்க: சமீபகாலமாகவே, எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவுகள் ஒவ்வொன்றாக வெளிவந்தபோதுகூட ஓபிஎஸ், கலங்கிவிட்டாராம்.. அந்த சமயத்தில், சசிகலாவுக்கு போனை போட்டு தன் மனக்குமுறலையும் ஓபிஎஸ் கொட்டியிருந்தாராம்.
"நீதிமன்ற விவகாரங்களை முன்னாள் ஆளுநர் ஒருவர் மூலமாகத்தான் அணுகுகிறார் எடப்பாடி. அவர்களை நம்மால் ரீச் பண்ணமுடியலைம்மா... பாஜகவின் முக்கிய சோர்ஸ்களிடம் நான் பேசும்போது, "கவலைப்படாதீங்க; பயப்படாதீங்க. உங்களை தலைமை கைவிட்டுவிடாது" என்றே எனக்கு நம்பிக்கை கொடுத்தனர். அதனாலேயே நீதித்துறை தரப்பில் சீரியஸ் காட்டாமல் இருந்து விட்டேன். பாஜக சோர்ஸை முழுமையாக நம்பியது என் தப்புதான்.. என்னை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள்" என்று குமுறலை கொட்டினாராம். எனினும், கடைசிவரை நம்பி கொண்டிருந்த, பொதுக்குழு தீர்ப்பும் இப்போது அதிர்ச்சியை தந்துள்ளதாம்.
இதனிடையே, ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு எப்படி இருக்க போகிறதென்று தெரியவில்லை.. 'மக்களை சந்திக்க போகிறோம்' என்று மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்து சொல்லி வருகிறார்.. அதற்கேற்றவாறு, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடு என ஒவ்வொன்றாக நடத்தி, ஓபிஎஸ்ஸின் அரசியல் சமீபகாலமாகவே எழுச்சியுடன் காணப்பட்டு வருவதையும் மறுக்க முடியாது..

எனினும், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? அதிமுகவில் இனி எந்த அடிப்படையில் அதிமுகவுக்காக உரிமை கோரப்போகிறார்? என்பது மிகப்பெரிய கேள்வியாக நிலவுகிறது..
பக்கபலம்: அனைத்து கதவுகளுமே அதிமுகவில் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், அவருக்கு 2 அதே சாய்ஸ்கள்தான் உள்ளன.. ஒன்று தனிக்கட்சி துவங்குவது அல்லது அமமுகவில் இணைவது என்று கணித்து சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. இதில் தனிக்கட்சியை இப்போதைக்கு ஓபிஎஸ்ஸால் துவங்க முடியாது என்கிறார்கள்.. ஒருவேளை தினகரனுடன் இணைந்துவிட்டால், அதிமுகவை இனி மொத்தமாக மறந்துவிட வேண்டியதுதான் என்றும் சொல்கிறார்கள். அதனால், என்ன செய்வதென்ற குழப்பத்தில் ஓபிஎஸ் இருக்கிறாராம்..
எனினும், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் போன்றோர் பக்கபலமாக ஓபிஎஸ்ஸூக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்து வரும் நிலையில், அடுத்தக்கட்டத்துக்கு எப்படி ஓபிஎஸ் டீம் நகர போகிறது என்பதும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.. அதேபோல, விரைவில் மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாடு கூட்ட போவதால், இதற்கான எதிர்பார்ப்பும் கூடிஉள்ளது.. ஆக மொத்தம், இவர்கள் 2 பேரின் விஷயத்தில் பாஜகவின் ரோல் என்ன? டிடிவி தினகரன், சசிகலா என்ன செய்ய போகிறார்கள்? என்பதையும் உற்றுநோக்க வேண்டி உள்ளது.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications