குட்நியூஸ்.. மாஸ் வேகத்தில் தமிழ்நாடு அரசு.. மதுரையில் மெட்ரோ சேவை எப்போது தொடங்கும் தெரியுமா?
மதுரை: மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்று மெட்ரோ இயக்குனர் அறிவித்து உள்ளார்.
மதுரையில் மெட்ரோ அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கையை தயாரிக்க புதிய டெண்டர் விடப்பட்டு உள்ளது.
கடந்த தமிழ்நாடு பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வெளியிட்டார். சென்னை கோடம்பாக்கம்- பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் திட்டம் 2025-ல் நிறைவு செய்யப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீடு என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் எழில்மிகு கோவை, மாமதுரை திட்டங்கள் மூலம் 2 நகரங்கள் மேம்படுத்தப்படும். ரூ172 கோடியில் கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ₹8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை மெட்ரோ:
இந்த நிலையில் தற்போது மதுரை மெட்ரோ தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. நேற்று சென்னை மெட்ரோ நிறுவன இயக்குனர் இது தொடர்பாக பேட்டி அளித்தார்.
அதில், மதுரை மெட்ரோ தொடர்பான ஆலோசனைகள், சாத்தியக்கூறு சோதனைகள் நடந்து வருகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். பல்வேறு இடங்களில் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அனுமதியும் பெற வேண்டும். அதன்பின் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் பல தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும். அவர்களுடன் ஒப்பந்தம் பெற வேண்டும். இதற்காக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இதனால் மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும்.
சென்னையில் உள்ளதை போன்ற மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் வர உள்ளது. இந்த பணிகள் 3 வருடம் நடக்கும். 2027ல் மெட்ரோ பணிகள் மதுரை முடிவு அடையும். இந்த மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels )செயல்படுத்தப்படும். கோவில் இருக்கும் பகுதிகளில், மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும்.
இதன் மூலம் கோவில்களின் அழகு பாதிக்காது. கோவில்கள் பாதுகாக்கப்படும், என்று மெட்ரோ இயக்குனர் அறிவித்து உள்ளார். சென்னையில் மெட்ரோ பணிகள் முடிந்து, தற்போது புதிய மார்க்கமாக மெட்ரோ போடப்பட்டு வருகிறது. சென்னையில் இப்போதுதான் மெட்ரோவை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்னும் பல மாவட்டங்களுக்கு மெட்ரோவை அறிமுகப்படுத்த போவதாக திமுக தெரிவித்தது.
அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்ததும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு நடவடிக்கைள் எடுக்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார். அதன்படியே தற்போது மெட்ரோ குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ரூட் எப்படி இருக்கும்?
இந்த மெட்ரோ சுரங்க பாதையாக இருக்காது என்று முதலில் கூறப்பட்டது. மாறாக மொத்த பாதையும் பாலம் கட்டப்பட்டு அதில்தான் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சுரங்க பாதையும் அமைக்கப்படும் கூறப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும். திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ செயல்படும்.
மொத்தம் 20 ஸ்டாப்கள் இங்கே செயல்படும். இதில் மதுரா கல்லூரிக்கு பின் சிம்மக்கல் வழியாக ஒரு ரூட் செல்லும். இன்னொரு ரூட் தெற்குவாசல் வழியாக செல்லும். இந்த இரண்டு பாதை குறிப்பிட்ட 3 ஸ்டாப்களுக்கு மட்டும் உள்ளது. இந்த ஸ்டாப்களில் இறங்க வேண்டிய மக்கள் மட்டும் லேன் மாறி செல்ல வேண்டும். இது மெட்ரோ லைட் என்பதால் அதிக அளவில் லேன்கள் இங்கே இருக்காது. இங்கவே மெட்ரோ 25 கிமீ வேகத்தில் மட்டும் செல்லும். அதிகபட்சம் 60 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்றாலும் தொடக்கத்தில் 25 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும். இதில் மெட்ரோவின் டெப்போ திருமங்கலத்தில் அமைக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications