செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் நிறுத்தம்.. 3 நாளுக்கு பிறகே பைபாஸ் சர்ஜரி- என்ன காரணம்?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களுக்கு பின்னரே அறுவை சிகிச்சை மேற்கொள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவருக்கு வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி கடந்த புதன்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில், செந்தில்பாலாஜியை சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கோரியும் அவரது மனைவி மேகலா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள், அமைச்சர் செந்தில்பாலாஜியை, மருத்துவ சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் வேக வேகமாகச் செய்யப்பட்டன. செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து காவேரி மருத்துவமனையின் முதன்மை செயல் இயக்குனர் அரவிந்தன் தலைமையில் மருத்துவக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டார் செந்தில் பாலாஜி. 10 நிமிடங்களில் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்றடைந்தது.
செந்தில் பாலாஜிக்கு விரைவாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனை டாக்டர்கள் குழுவும், இ எஸ் ஐ மருத்துவர்கள் குழுவும் பரிந்துரைத்திருந்தது. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவரது மனைவி மேகலாவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்டமாக செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்பே அறுவை சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியானது. செந்தில் பாலாஜிக்கு நேற்று இரவே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களுக்கு பின்னரே அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை டாக்டர்கள் குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜி 3 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார் 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகே அறுவை சிகிச்சை செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
3 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவது வழக்கமான செயல்முறைதான் எனத் தெரிகிறது. அறுவை சிகிச்சைக்கு முன்பாக எந்த விதமான மருந்துகளும் எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும். இசிஜியில் ரத்த அடைப்புகள் கண்டறியப்பட்டதுமே, ரத்த அடைப்புகளை தவிர்ப்பதற்கான மருந்துகள் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டு வந்தன.
அறுவை சிகிச்சைக்கு முன்பாக அந்த மருந்துகள் நிறுத்தப்பட்டு, சில நாட்கள் கண்காணிப்பில் மருத்துவர்கள் வைத்திருப்பார்கள். மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போதே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாது, அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஏற்பாடாக தற்போது செந்தில் பாலாஜிக்கு மருந்துகள் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
காவேரி மருத்துவமனையில் டாக்டர்கள் குழுவின் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி 3 நாட்கள் வைக்கப்படுவார் என்றும் அவரது உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்யப்படும். அதன்பிறகே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என காவேரி மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும் -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!












Click it and Unblock the Notifications